January 10, 2019

உடுநுவர அறபா முஸ்லிம், மகா வித்தியாலயத்தின் சாதனை


இம்முறை வெளியான க.பொ.த. உயர்தர  பரீட்சை பெறுபேறுகளின் படி தெநுவர   கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் மிகச் சிறந்த பெறுபேற்றை  உடுநுவர அறபா முஸ்லிம் மகா வித்தியாலயம் பெற்றுள்ளது.

இப்பாடசலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில்  13 பேர்  பாடசாலை வரலாற்றில்  முதல் முறையாக  சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலை கழகத்திற்குச் செல்வதற்கான தகுதியை பெற்றுள்ளதாகவும் இது தெநுவர   கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே மிகச்சிறந்த பெறுபேறுகளெனவும் அதிபர் எம்.பீ.எம் சாஜஹான் குறிப்பிட்டார்

மேற்குறிப்பிட்ட மாணவர்களின் மூன்றுபேர் சட்டத்துறைக்கும் ஏனைய துறைகளுக்கு மற்றும் மாணவர்களும்  தெரிவாகியுள்ளதாகவும் மேற்படி மாணவர்ளை​ பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பாது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் அதிபர் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்

அவ்வாறு சித்தி பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு  எம்.எம்.சாஜிதா (3. ஏ.),  எம்.எஸ்.எப்.முபஷ்ஷிரா (3.ஏ),  எம்.எஸ்.எப்.  ரிஸ்லா பானு (2.ஏ.1.பி),  எம்.என்.ஆயிஷா (1.ஏ.1.பி.1.சி.),  M.M.M மர்யம் (2.பி.1.சி),   ஏ.எப்.அப்ரா .(3.பி),  எம்.எப்.என். ஹிதாயா (1.ஏ.2.பி),     ஏ.எஸ்.எப். சரீபா (3.பீ),    எம்.எம்.எப்.நஸ்மிலா (1.ஏ.1.பி.1.சி),  எம்.என்.நுஹா  (1.பி .2.சி),  எம்.ஏ .பாத்திமா ரிஸ்லா (3.பீ), எம்.ஏ.எப். ஸால்பா.(1.பி.2.சி), எம்.எஸ்.செய்னப் (3.சீ). ஆகிய மாணவர்களே பல்கலை கழகத்திற்கு தகுதி பெற்றவர்களாவர்

மேற்குறித்த  மாணவர்கள்  அதிபர் ஆசிரியர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட படம்

-Hfeez-

9 கருத்துரைகள்:

May Almighty Allah Bless the Teachers, Parents and Students for their great Achievements..

its a great pride and honor for the school not only we appreciate principal n concerned teachers honor should go to primary teachers who taught them we never forget former principal Mr fazly sulaiman who were guiding light from O/L to A/L so its a team work anyway these students made the school proud and we wish them every success in their higher studies

This's not the first time in ARAFA'S history. be fore sending this type of masseges please collect the facts accurately.. Advance leval stared during the period of former principal Mr.Awoon since then Arafa produced many graduates under the guidance of former PRINCIPALS and former TEACHERS...
first we should appreciate the students for the trust they had in school and teachers who were there at that time when they start there advance level they did't leave the school they worked hard they got good start

This's not the first time in ARAFA'S history. be fore sending this type of masseges please collect the facts accurately.. Advance leval stared during the period of former principal Mr.Awoon since then Arafa produced many graduates under the guidance of former PRINCIPALS and former TEACHERS...
first we should appreciate the students for the trust they had in school and teachers who were there at that time when they start there advance level they did't leave the school they worked hard they got good start

Masha Allah நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு...
இருப்பினும் சமூக வலயத்தளங்களில் இதுபோன்ற விடயங்களை பதிவேற்ற முன் அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டிய பொறுப்புள்ளவ்ர்களாக நாம் இருக்க வேண்டும்.
ARAFA பாடசாலை இதற்கு முன்பும் சிறந்த பெறுபேறுகளை O/L ,A/L லில் வெளிக்காட்டியுள்ளது .ஆகவே வரலாற்றில் முதல் முறையாக என்ற வார்த்தைப்பிரயோகம் பிழையான ஒன்றாகவே நான் காண்கின்றேன். இந்த உயர்தர வகுப்புகள் முன்னாள் அதிபர் Mr.Awoon அவர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரையிலும் அதட்காக நிறைய ஆசிரிய , ஆசிரியைகள் தியாகத்துடன் உழைத்தன் அடைவே இப்பெறுபேறுகள்…
இதைவிட இம்மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டி வெளிப்பாடசாலைகளுக்கு செல்லாது அரவணைத்து உயர்கல்வியை ARAFA பாடசாலையிலே தொடர உறுதுணையாய் இருந்த SDEC,OBA,SMT மற்றும் முக்கியமாக இம்மாணவர்களுக்கு கற்பித்த ஏனைய ஆசிரிய, ஆசிரியைகளையும் நன்றியுடன் ஞபாகம் ஊட்ட வேண்டிய கடமை இப்பதிவை இட்டவர்களுக்கும், பாடசாலைக்கும் இருக்க வேண்டுமென்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் .

Good luck Naleefa Teacher

Post a comment