Header Ads



உலக முடிவுநாள் வரை, எங்களின் மார்க்கம் இஸ்லாம்தான் - பாராளுமன்றத்தில் உவைசி கர்ஜனை

'ஒரு ஆண் பல பெண்களோடு விபசாரம் செய்தால் அது குற்றமில்லை என்று இந்த நாட்டு சட்டமாக்கியிருக்கிறீர்கள். ஆனால் ஒரு முஸ்லிம் மார்க்கம் விளங்காமல் முத்தலாக் கொடுத்து விட்டால் அவருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை. இது எந்த வகையான சட்டம். முத்தலாக் சொன்னால் அதனால் திருமணம் முறியாது என்றும் சட்டம் சொல்கிறது. பிறகு எதற்கு மூன்று வருட தண்டனை? வாகனம் மோதி ஒருவர் இறந்து விட்டால் வாகனம் ஓட்டியவருக்கு இரண்டு வருட தண்டனை. அதே ஒரு முஸ்லிம் முத்தலாக் சொன்னால் மூன்று வருட தண்டனையா?

இந்து விவாகரத்து செய்தால் ஒரு வருட தண்டனை? அதே ஒரு முஸ்லிம் விவாகரத்து செய்தால் மூன்று வருட தண்டனை? இது எந்த வகை நியாயம்?

சபரி மலை பிரச்னைக்கு 'அது எங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்' என்ற பதில் வருகிறது. 'தலாக்' பிரச்னை என்பது எங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் அல்லவா? இது ஆர்ட்டிகிள் 29 க்கு எதிரானது அல்லவா? 

திருமணம் என்பது இஸ்லாத்தில் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் முத்தலாக் கொடுத்தால் மஹர் தொகையை இரண்டு மடங்காக அல்லது மூன்று மடங்காக பெண்ணுக்கு தர வேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள். அதை தர இயலாது போனால் சிறையில் அடையுங்கள். இது போன்ற நடைமுறைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு முஸ்லிம் ஆண்களை வஞ்சகமாக சிறையில் தள்ளுவதுதான் உங்களின நோக்கம் என்கிறேன்.

பிஜேபியில் அங்கம் வகிக்கும் முக்தார் அப்பாஸ், ஷாநவாஸ் ஹூசைன்களுக்கு சொல்கிறேன். உங்களின் ஷியா கொள்கைகளுக்கும் சிறிது சிறிதாக ஆப்பு வைக்க முனைவார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

84 சதவீதம் இருக்கும் இந்து மக்களில் 10 வயதில் திருமணம் நடக்கும் பால்ய விவாகத்தை தடை செய்தீர்களா? அதற்காக இது போன்ற கடுமையான சட்டத்தை இயற்றினீர்களா? இந்து இளம் விதவைகள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்களே அவர்களுக்காக சட்டம் ஏதும் இயற்றினீர்களா?

இந்த அரசுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். சட்டத்தாலோ, காவல்துறையை வைத்தோ, மிரட்டியோ, வன்முறையை கட்டவிழ்த்து விட்டோ எங்களின் இஸ்லாமிய நடைமுறைகளை தூக்கி எறிந்து விடலாம் என்று பகல் கனவு காணாதீர்கள். உலக முடிவு நாள் வரை எங்களின் மார்க்கம் இஸ்லாமாகத்தான் இருக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.'

6 comments:

  1. Well said.... may allah help every muslim to strengthen our eaman.

    ReplyDelete
  2. இந்தியா நீதிக்கு புறம்பாக உள்ள சில முஸ்லிம் சட்டங்களை மாற்றியமைத்ததுள்ளது.

    ஆனால், ஏற்கனவே பல நாடுகள் இதை செய்துவிட்டனவே. அமேரிக்க, uk, Australia, NZ, ஜேர்மனி, ரஷ்யா போன்ற எல்லா மேற்கு நாடுகள் மட்டுமல்ல, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளும்ஏற்கனவே முஸ்லிம் சட்டங்களை நவீனப்படுத்தி விட்டார்கள், வருகிறார்கள்.
    முஸ்லிகளும் இதை ஆதரிப்பதால் தானே இந்த நாடுகளுக்கு முண்டியடித்துக்கொண்டு போகிறார்கள்.

    இது தெரியாமல் இவரு கிணத்து தவளை மாதிரி கத்துறாரு

    ReplyDelete
  3. jazakallahu khairan for the Lion Uwaisi

    ReplyDelete
  4. விபச்சாரகனாகவும், விபச்சாரியாகவும் வாழ்பவர்களுக்கு அந்தோனியாரின் சட்டம் பொருந்தும். தஜ்ஜால்(Anti-Christ) வருவதட்கான அடையாளங்களில் உள்ளவைதான் இவையெல்லாம்

    ReplyDelete
  5. தமிழகத்தில் இத்தகைய தலைவர் இல்லையே என்று வருந்துகிறேன்

    ReplyDelete

Powered by Blogger.