Header Ads



தீர்க்கமுடியாத பல, பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கின்றன - ஹக்கீம்

வெற்றிகளை வைத்து அரசியல்வாதிகளை எடைபோடுவதில்லை. தோல்விகளை கண்டு துவண்டுபோகாமல், தனது அரசியல் அந்தஸ்தை காப்பாற்றிக்கொண்டு எப்படி வாழ்கிறார் என்பதை வைத்துத்தான் எடைபோடப்படுகின்றனர். 

ஏ . ஆர் . மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில் ஏ.ஆர்.மன்சூர்  புதல்வரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் மர்ஹூம் மன்சூரின் பாரியார் திருமதி சொஹ்ரா மன்சூர்  முன்னிலையில்  முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பற்றி கல்முனை  மாநகர சபை முன்னாள் உறுப்பினர்ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீட்டு விழா  (12) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள்,உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

அந்தவகையில் மன்சூர் என்ற அரசியல்வாதி மரணிக்கும் வரை தனது அரசியல் அந்தஸ்தை இழக்கவில்லை. அவர் மக்கள் சேவையை தனது மனதில் சுமந்தவராகத்தான் கடைசிவரைக்கும் இருந்தார் என்பதற்கு நிறைய சாட்சிகள் இருக்கின்றன.பத்திரிகையில் அவரது பிரதேசம் பற்றி ஏதாவது செய்திகள் வந்தால், அதைப்பற்றி தொலைபேசி மூலம் கதைப்பது அவரது நாளாந்த நடவடிக்கையாக இருந்துவந்தது. குவைத் நாட்டுக்கு அவரை தூதுவராக அனுப்பியபோது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு பாரிய அபிவிருத்திகளை அவர் பெற்றுக்கொடுத்தார். அதேபோன்று கல்முனை பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு குவைத் நாட்டிலிருந்து பணம் சேர்த்துக்கொடுத்தார்.

அரசியலில் ஆரம்பத்தில் எமது எதிரியாக இருந்த ஏ.ஆர். மன்சூர், இறுதிக் காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குபவராக மாறினார்.அவரது அரசியல் அனுபவங்களும், ஆலோசனைகளும் எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமையும்.

காலஞ்சென்ற ஏ.ஆர். மன்சூர் முஸ்லிம் காங்கிரஸின் எதிரியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலம் செல்லச்செல்ல அவரின் மானிடப் பண்புகள் பற்றி நானும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபும் அறிந்துகொண்டோம். அவரது அந்திம காலத்தில் அஷ்ரஃபுடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தார். அவரை ஒரு அரசியல் ஆலோசகராகத்தான் நாங்கள் பார்த்தோம். அவரது அனுபவங்களின் வாயிலாக ஏராளமான விடயங்களை எங்களுக்கு கற்றுத் தந்தார்.

1970ஆம் ஆண்டு ஐ.தே.க. சார்பாக கல்முனையில் போட்டியிட்ட மன்சூர், சிறிய வாக்கு வித்தியசாத்தில் தோற்றலும், 1977ஆம் ஆண்டு மருதமுனை மக்களின் ஆதரவில் களமிறங்கி பொதுத் தேர்தலில் அபார வெற்றியீட்டினார். அன்று தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை கல்முனை தொகுதியின் நிரந்த அரசியல் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்தினார். அவரது காலப்பகுதியில் நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு பாரிய சேவைகளை அவர் செய்துவந்தார்.

ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் முரண்பாடு இருந்தாலும், கடைசியில் தன்னை கட்சியுடன் இணைத்துக்கொண்டார். அதுமாத்திரமின்றி அவரது புதல்வரையும் எமது கட்சிக்காக கொடுத்திருக்கிறார். எமது கட்சியின் ஆலோசகராக தொடர்ந்தும் இருந்துவந்த ஒருவரைத்தான் நாங்கள் இன்று இழந்திருக்கிறோம். அவர் எம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது ஆலோசனைகளும் அனுபவங்களும் எமக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தீர்க்கமுடியாத பல பிரச்சினைகள் பல இருந்துகொண்டிருக்கின்றன. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் அதனைச் செய்துமுடிப்பது என்பது, ஆசனங்களின் சமன்பாட்டினால் சாத்தியமில்லாமல் போய்விட்டது. அடுத்த தேர்தலின் பின்னர் இதை நிந்தர சுபீட்ச பூமியாக மாற்றுவதற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையே இருக்கின்ற புரிந்துணர்வை வளர்ப்பதும், பேரின அரசியல் தலைமைகளிடம் சரியான அணுகுமுறைகளை கையாள்வதற்கும் மன்சூரின் பணிகள் எங்களுக்கு துணையாக அமையும் என்றார்.

2 comments:

  1. ஹக்கீம் அவர்களே, தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது கடைசி காலத்தில் உங்களுக்கு, ஹிஸ்புல்லாஹ், மாயோன் முஸ்தபா ( இவர்களெல்லாம் தலைவருக்கு ஆப்பு வைக்க முயட்சித்தவர்கள் ) போன்றவர்களுக்கு ஆப்பு வைப்பதட்காகவே, மன்சூர் அவர்களின் வீடு சென்று அவரது ஆதரவை கோரினார். தான் ஏதும் பிழைகள் செய்திருந்தால் மன்னிப்பும் கோரினார். இது தலைவர் அஷ்ரப் அவர்களின் மேலோங்கிய மனிதப் பண்பு.
    மன்சூர் அவர்கள் எந்த சமூகப் பிரச்சினை என்றாலும் சகல கல்விமான்கள், அரசியல் வாதிகள் ( தனது எதிரணியில் இருப்பவர்களையும் கூட ) ஓன்று கூட்டி கலந்தாலோசித்து அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார். உதாரணமாக கல்முனை மாவட்ட சபை ( இப்போது நீங்கள் கூறும் தென்கிழக்கு அலகு ). இதன் கூட்டத்தின் கடைசியில் எடுக்கப்பட்ட முடிவு அதனை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுடன் கிழக்கு மாகாணத்துக்குள் தனித்து இயங்குவது எனபதுமாகும். இப்படியான விடயங்களை உங்களிடம் காணவும் இல்லை, அதட்கான தூர நோக்கும் உங்களிடம் இல்லை. முஸ்லிம்களை இனி அந்த அல்லாஹ் தான் காப்பற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.