Header Ads



ஜுமுஆ நாளன்று, ஹெல்மட் போடக்கூடாதா..?

முஸ்லிம்கள் சுத்தமானவர்கள், சமாதனப் பிரியர்கள், பிரச்சினைகளின் போது நடுவராக இருப்பவர்கள் என்றெல்லாம் கூறப்பட்ட காலம் மலையேறிவிட்டது போன்ற ஒரு நிலமை தோன்றியுள்ளது துரதிஷ்டமேயாகும். எமது தவறை ஏற்றுக் கொள்ளாமல் உரிமைக் குரல் எழுப்பும் ஒரு மோசமான நிகழ்வு பாணந்துரை தொட்டவத்தையில் கடந்த வாரம் நிகழ்ந்தது வெட்கமான விடயமாகும்.

நாட்டிலே ஒரு போக்குவரத்து சட்டமுள்ளது. வாகனம் ஒட்டுவதாக இருந்தால் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் லைசன்ஸ் கட்டாயமாகும், மஞ்சல் கோடிட்ட இடத்தால் தான் பாததாரிகள் கடக்க வேண்டும், மோட்டார் சைக்கிள் ஓட்டுவோர் தலைக் கவசம் அணிய வேண்டும்  என இன்னோரன்ன போக்குவரத்து சட்டங்கள் உள்ளன. இவற்றை மீறிச் செயற்படுவதென்பது நாட்டுச்சட்ட திட்டங்கள் அடிப்படையில் மாத்திரமன்றி நமது சன்மார்க்க போதனைகளுக்கும் முற்றிலும் மாற்றமானதாகும்.

நாம் பள்ளிக்குச் செல்கிறோம் தொழுகைக்குச் செல்கிறோம் என்பதற்காக போக்கு வரத்துச் சட்டத்தை மீறி நடக்கலாமா? சட்டத்தை அமுல் நடாத்தும் காவல் துறையினரோடு சண்டையிடலாமா? என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். ஏதேனும் பிழை நடந்து விட்டாலும் முறையாகப் பேசி சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நாம் அவர்களோடு சண்டையிடுவதால் கண்ட பயனென்ன?

ஜுமுஆ நாளன்று மாத்திரம் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஒட்டலாமா? காத்தான்குடி போன்ற பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் பல பிரதேசங்களில் காவல்துறையினர்  தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள் ஒட்டுவதையிட்டு கண்டு கொள்ளாதிருப்பதை நாம் துஷ்பிரயோகம் செய்யாதிருக்க வேண்டும். அந்தச் சலுகையை மீறி ஐவேளையும் நம்மிற் சிலர் தலைக்கவசமின்றி வண்டி ஒட்டுவதால் துஷ்பிரயோகம் செய்வது வருந்தத்தக்கதே.

கிடைத்துள்ள சலுகைகயை உரிமையென்று கூறி முரண்பட்டுக் கொள்வது எவ்வளவு பிழையென்பதை நாம் சிந்திப்பது எப்போது? ஏன் நாம் நியாயத்தின் பக்கம் இருக்கக் கூடாது? நம்மவன் தவறு செய்தால் அதற்காக உரிமைப் போராட்டமே வெடிக்கிறது. பிழையை ஏற்று திரும்பவும் செய்யாதிருக்க சிந்திக்காமல் இருப்பதேன்? பாதைக்குறிய ஹக்கை கொடுத்து விடுமாறு கூறியது எமது நபியல்லவா?

நடந்தது நடந்து விட்டது என்று விடாமல் சமூக வலைத்தலங்களில் பல்வேறு விதமாக பதிவிடுவது ஒரு பாவமான காரியம் என்பதை நாம் எப்போதாவது புரிந்துள்ளோமா? நடந்து கொண்டிருந்த விடயத்தை படம் பிடித்து போட்டது மாத்திரமன்றி தன்னிடம் ஒரு இரும்புத் தடி கிடைத்திருந்தால் காவல் துறையினரைப் பதம் பாத்திருப்பேன் எனக் கூறுவது கெட்டித்தனமென சிலர் நினைக்கின்றார்கள். அது நடந்திருந்தால் நிலமை எவ்வாறிருந்திருக்கும் என்று பாருங்கள் அவ்வாறு பதிவு செய்வதன் மூலம் மற்றப் பிரதேசங்களிலும் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் இந்த வழியைக் கடைபிடியுங்கள் என்பது போலிருக்கிறது.

மேற் கண்ட கண்டிக்கத் தக்க விடயங்களிலிருந்து முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்வது சன்மார்க்க கடமையாகும்.

தல்துவை பவாஸ் 

5 comments:

  1. Arumaiyana paziyu amazu ariyu ketta jenmangal appazaan thirunthumo theriyazu

    ReplyDelete
  2. தேரர் மார் தலை கவசம் அனியாம போராங்கலே அப்படி சட்டம் ஏதும் இரிக்கிதா

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    தான் தவறு செய்துவிட்டு சண்டையும் பிடிப்பது எவ்வளவு பெரிய குற்றம்...
    அவன் செய்கிறான் இவன் செய்கிறான் என்பதல்ல
    செய்தது தவறு
    இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்.........

    ReplyDelete
  4. Regardless of any personality from top to down... if you are a human and citizen of this land... Obey the safety Rules. This is to protect you not any other.

    If anybody violate safety rules...implement the law at most.

    Keep one helmet for Friday, which is available enough at the market. Do not spoil the name of a community helping others generalize this issue toward whole community as not respecting the Rules.

    Kind request to police officers.. implement the rules..and also do not be flexible as per your favor too.

    ReplyDelete
  5. சட்டம் பொதுவானது தலை கவசம் என்பது நமக்குத்தான் என்பதை சிலபேர் அறிவது இல்ல

    ReplyDelete

Powered by Blogger.