Header Ads



"வாழ்வென்றால் போராடும் போர்க்களமே" - இது சட்டத்தரணி, ஷிஹார் ஹஸனின் கதை

2008 ம் ஆண்டு உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் ( Bio Science) உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி தோல்வியடைந்தவர்.

Biology பாடத்தில் மாத்திரம் C கிடைத்துள்ளது மற்றைய இரண்டு பாடங்களான Chemistry, Physics fail. ஆமாம் முட்டைகள்தான் 😊.

அதுவும் மெளலானா சேரின் படிப்பித்தலில் அவ்வப்போது மனதில் பதிந்த விடயங்கள் மாத்திரமே Biology பாடத்தில் C யினை தந்ததாக ஷிஹார் கூறுகிறார்.

அவருடைய வகுப்பிலிருந்த பலர் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு தெரிவாகினர்.

மற்றும் பலர் எல்லாப்பாடங்களிலும் Pass என்ற நிலையில் தனியார் மற்றும் அரச கல்வி நிறுவனங்களில் வேறு கற்கை நெறிகளை பயிலச்சென்றுள்ளனர்.

ஷிஹார் தனது ஒரு C யுடன் எதுவுமே செய்ய முடியாத நிலையில் 2008 இல் இருந்தார்.

ஏனையோர்களால் ஏளனமாக நோக்கப்பட்டார், ஒரு தோல்வியின் வலியில் அவர் இருந்தார்.

பிறகு ஒரு நண்பனின் தூண்டுதலில் இரண்டாவது தடவை உயர்தர பரீட்சை எழுதி எல்லாப்பாடங்களிலும் சித்தியடைந்துள்ளார்.

இருந்த போதிலும் அது பல்கலைக்கழக நுழைவிற்கு போதுமானதாக இருக்கவில்லை, தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்பை தொடர ஷிஹாரிடம் போதிய பொருளாதார வசதியுமிருக்கவில்லை.

ஆனாலும் அவர் அப்போது Law College Entrance exam இற்கு தயாரானார்.

அதற்கான ஆயத்த வகுப்பிற்கு மாதம் 2000/- செலவிட முடியுமான வசதியை ஒருவாறு சிரமப்பட்டு தேடிக்கொண்டார்.

ஷிஹார் சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சையில் 2010 இல் வெற்றிகரமாக தேறினார்.

பின்னர் சட்டக்கல்லூரியில் நுழைந்து இன்று ஒரு வெற்றிகரமான முன்னணி சட்டத்தரணியாக விளங்குகிறார்.

அவரை வசை பாடியவர்கள், ஏளனமாய் நோக்கியவர்கள் அடங்கலாக பலர் இன்று அவரது உதவியை நாடி வருகிறார்கள்.

Bio Science படித்து விட்டும் Lawyer ஆகலாம் அதுவும் பூச்சியத்திலிருந்து சிகரம் தொடலாம் என்பதற்கு ஷிஹார் ஆதாரம்.

- Mujeeb Ibrahim -

2 comments:

  1. Great story to read ..
    It is a lesson to all who wants to do science; nd engineering. Many wrong decisions make life miserable and end in wrong jobs ..
    So, good for all to read and guide children

    ReplyDelete
  2. Great Story
    we wish Shihar hassen all the very best to achieve more and more !!

    ReplyDelete

Powered by Blogger.