Header Ads



மஹிந்தவுடன் கூட்டணி அமைக்க, தயாசிறிக்கு ஜனாதிபதி பணிப்பு

மஹிந்த ராஜபக்ஷ அணியுடன் இணைந்து கூட்டணியாக பயணிப்பதாகவும் அடுத்த பிரதான தேர்தல்களை எதிர்கொள்ள முன்னர் கூட்டணியை அமைக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளதுடன்  கூட்டணியை அமைக்கும்  பொறுப்பினை ஸ்ரீல.சு.காவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவிடம் வழங்கியுள்ளார். 

எனினும் மஹிந்தவுடன் கூட்டணி அமைப்பதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தாம் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் செயற்குழுக் கூட்டங்கள் நேற்று  நண்பகலும், நள்ளிரவும் கொழும்பில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக செயற்பட்ட காலாநிதி ரோஹன லக்ஸ்மன் பியதாச நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அடுத்த வாரத்துக்குள் நியமிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.