Header Ads



சரியான குதிரையை களமிறக்க, இருப்பதாக ஐதேக அறிவிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளில் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் இருவேறு நிலைபாடுகளில் இருப்பதாகவும் இந்தப் பிரச்சினைகைய அவர்களால் தீர்த்துக்​கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென, தெரிவித்துள்ள கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி சரியான குதிரையை களமிறக்கி வெற்றிப்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாத்தளை – கலேவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாதகாலமாக நாடு நிலையற்ற நிலையில் காணப்பட்டது. நாம் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியால் தடையேற்படுத்தப்பட்டது. ஆனால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போது விரைவாக 2,3 மடங்குகளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. ஐக்கிய தேசியக் கட்சியில் இப்போது உள்ள குதிரைகளில் தலைவரைத் தவிர ஏனைய குதிரைகள் எல்லாம் ஓடக்கூடிய குதிரைகள்தான்
    அதை விடுத்து வெளியிலிருந்து குதிரை கொண்டு வந்து ஜனாதிபதி தேர்தலுக்கு விடுவார்களேயானால் அது மஹிந்தவுக்கு சாதகமாகவே முடியும்

    ReplyDelete

Powered by Blogger.