Header Ads



பாணந்துரை - தொட்டவத்தையில் சுமுக நிலை

பாணந்துரை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போடப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு இன்று -05- காலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துரை கெசல்வாத்தை, தொட்டவத்தைப் பிரதேசத்தில் நேற்று ஜும்ஆ தொழுகையுடன் இடம்பெற்ற பதற்ற நிலைமையையடுத்து நேற்றிரவு (04) அப்பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தொட்டவத்தைக் கிராமத்துக்குள் ஜும்ஆ தொழுகைக்கு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இல்லாமல் வந்த ஒருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் நேற்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் அப்பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பொலிஸார் வான் நோக்கி துப்பாக் வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர்.

சம்பவத்தில் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

DC

3 comments:

  1. Obey the the rules.... this for your own safety... do not br ignorant and do not argue with police for yiur mistake

    ReplyDelete
  2. We have to respect our country n law first,all jummah Bayan should be the headline n teach our society how to respect mother country

    ReplyDelete
  3. General Rules of this country is to be followewd by every citizen. Masjid admin should take this issue seriously and use jumma to educate the public

    ReplyDelete

Powered by Blogger.