Header Ads



சம்பளத்திற்காக மாத்திரமே மெலளவிமார், வேலை செய்கிறார்கள் - மனிதநேயமிக்க பௌத்த தேரரின் வேதனை


இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மௌலவிமார் தங்கள் பொறுப்புக்களை சரியாக
நிறைவேற்றவில்லை என வதுரகும்புர தம்மரத்தன தேரர் குறிப்பிட்டார்.

கண்டி திகன தெல்தெனிய சம்பவம் இடம்பெற்ற போது ஜும்மா தொழுகை நடத்த பள்ளிவாசலுக்கு காவல் இருந்த வதுரகும்புர தம்மரத்தன  தேரரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வானொலி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் உள்ள மௌலவிமார் தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை.என்னை நாளை முஸ்லிம் மௌலவிமார் விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை . இவ்வாறு நான் கூறுவதற்கு காரணம் உள்ளது.

நான் யடியகல பன்சலையின் பிரதம தேரர், நான் யடியகலவிற்கு வந்து  தற்போது 13 வருடங்கள் ஆகின்றன.யடியஹகலவில் இருக்கும் எனக்கு  ரன்பண்டாரவின் மனைவி உக்குமெனிகா அவர்களின் மகன்  நெத பொடிபண்டா அவரின் மகன் கயான் இவர்களின் குடும்பத்தை பற்றி நான் நன்கு அறிந்துவைத்துள்ளேன். அவர்களின் பிரச்ச்சினைகளை நான் அறிந்துவைத்துள்ளேன்.

கண்டி திகன பிரச்சினையின் போது நான் தெஹியங்க பள்ளிவாயல் மௌலவிகளுடன் கதைத்தேன்.

ஒருவர்  புத்தளம், மற்றவர் மன்னார் எங்கிருந்தாவது இருந்து மௌலவிமார்களை கூட்டி வந்து பணி அமர்த்தியுள்ளார்கள்.

அவர்கள் மதவழிபாடுகளில் ஈடுபடுவதோடு நின்றுவிடுகிறார்கள் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.அவர் அந்த ஊருக்காக ,ஊரின் மத நல்லினக்க செயற்பாடுகளுக்காக என எந்த ஒரு விடயத்திலும் கலந்துகொள்வதில்லை.

பிரதேச பௌத்த சமூகங்களோடும் மதகுருமார்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள  முற்படுவதில்லை. சம்பளத்திற்கான வேலையை மாத்திரம் இவர்கள் செய்கிறார்கள் இதனை மாற்றவேண்டும்.

பள்ளிவாயல்களுக்கு முடியுமானவரை அப்பிரதே மௌலவிமார்களை நியமிக்க வேண்டும். ஊரில் உள்ளவர்களின் விபரங்களை அவர்கள் அறிந்து வைத்திருக்கவேண்டும்.  

மௌலவிமார்கள் அவர்களின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.  பெரும்பான்மையானவர்கள் அதனை செய்வதில்லை என்றே நான் கருதுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 comments:

  1. இவர் போன்ற மதகுருமார்கள் தான் நமது நாட்டுக்கு தேயானவர்கள் வாழ்க உங்கள் சேவை

    ReplyDelete
  2. இவர் போன்ற மதகுருமார்கள் தான் நமது நாட்டுக்கு தேயானவர்கள் வாழ்க உங்கள் சேவை

    ReplyDelete
  3. இந்த உண்மையைக் கேட்டபிறகாவது எங்கள் சமூகமும்அதன் பள்ளிவாயல்களைக்கட்டிக் க்ாக்கும் அதன் தலைவரகளும் இந்த வியத்தைச்சரியாக விளங்கி அதனை செயல்படுத்த முன்வருவார்களா?

    ReplyDelete
  4. very good point and we need to implement this in every village

    ReplyDelete
  5. 👏👏👏👏👏👍👍👍 i appreciate you

    ReplyDelete
  6. மதரசா பாடத்திட்டங்களில் சமூகப்பணிகள் எவ்வாறு செய்வது என்பது சம்பந்தமான பாடத்திட்டம் இணைக்கப்பட வேண்டும் .

    ReplyDelete
  7. இந்த குருவானவரின் கண்களையும் தோற்றத்தையும் பாதார்த்'தாலே களை கொட்டுகின்றது. சொந்த ஊர் மௌலவிமார்களே தங்கட ஊர்களுக்கு சேவை செய்ய முன் வருவதில்லை. இந்நிலையில் வெளி மௌலவிகள் என்ன செய்து கிளிக்கப் போயினம்.

    ReplyDelete
  8. Buddist priest also never visit mosque and try to do develop any kind of relationship with muslims. Why they can not initiate this move from their side. Everyone is only for blaming muslims.

    ReplyDelete
  9. முற்றத்து மல்லிகை மணப்பதில்லை

    ReplyDelete
  10. All Mosques are concerned only money. Jummah collection, building collection, ramzan collection, kanchy collection, 27th night collection, santha collection etc. Washing janaza making dua also for money. At a mosque in periyamulla Negombo , no free kanchi, but for money.

    ReplyDelete
  11. I see many dedicated moulavies in my area.
    I appreciate them...

    ReplyDelete
  12. This budhist preist from nelligala international budhist center in kandy district yatinuwara.
    The temple is on top of very big mountain stone in a Muslim village border to sinhala villages too.
    center was built by mahinda Rajapaksa government period, before that there wasn't even a statue.
    As its a international budhist center there will be recording of bana starts in evening very badly disturbing the Muslim villages around even in ramadhan as it continues till morning.
    He is one of the chief, well saying that he may be not having the control of the bana going on till morning. As it's international budhist centre there will also a very big croud of people visiting from all over.
    This preist is a respected person by the Muslim villagers as he maintenance a good relationship even when the kandy digana incident this preist was in the mosques with sinhalease giving protection to Muslims for few days staying in mosque.
    This how through experience only he would come to this statement lack of communication from immas to the other communities.
    As per the preist statement most of them are agreeing 100 correct.
    That meens we are finding the gap that we have realise how ammend it.


    ReplyDelete
  13. Muzalil Ungal Markthai Shari Sheyyawum

    ReplyDelete
  14. புத்தளம் மன்னார் எங்கிறார் சிங்கள பாஷை தெரியாம பின் நின்றிருக்க லாம்.

    ReplyDelete
  15. இஸ்லாத்தை சரியாகப் போதித்தாலே போதும் சக மனித மனமறித்து பழகலாம். மார்கமில்லாத கயவர்களால் தான் முழு சமூகத்துக்கும் அவதூறு கேடு.

    ReplyDelete
  16. This is absolutely true! The Masjid "Hazrath" or "Muadhin" are only trained to conduct daily Salah and Jumm'a. Some are trained to do "Katham" and "Fathiha". Whereas the Buddhist Priests are the ones who guide the community attached to their temple. Although, the expectation of this Priest is right from his point of view, the responsibility lies with the elders of the area and the Board of Trusties of Mosques. Then again, we have the tug of war between the different sects who work for their own agenda! When will they unite and work to resolve problems of the community is the question!

    ReplyDelete

Powered by Blogger.