Header Ads



"இதுதான் உண்மை"- கொழும்பு கிராண்பாஸ் சுலைமான் மருத்துவமனை விவகாரம்


தற்போது சர்ச்சைக்குரிய பொருளாகப் பேசப்படும் அமானிதத்துக்குரிய நம்பிக்கைச் சொத்தாகிய கொழும்பு கிராண்ட்பாஸ் சுலைமான் மருத்துவமனை அமைந்த காணி தொடர்பில், இச் சொத்து யாருக்கும் தெரியாமல் பிரபல ஆடையகம் ஒன்றுக்கு இரகசியமாகக் கைமாற்றப்பட்டுள்ளது என்னும் செய்தி அறிந்து, இதில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களா என குறித்த ஆடையக நிறுவனத்தாரிடம் விசாரித்தோம். அவர்கள் விடயத்தை பின்வருமாறு தெளிவுபடுத்தினார்கள்.

இக் காணி எங்களுக்கு விற்கப்பட்டதாகவோ, கைமாற்றப்பட்டுள்ளதாகவோ பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானதும், பொய்யானதுமாகும்.

அப்துல் கபூர் நம்பிக்கை நிதியத்திலிருந்து கபூரிய்யாவுக்கு கிடைக்கும் வருவாய், சுலைமான் மருத்துவமனை மூடப்பட்டதால் நின்று போனதாக அறிந்தோம். இந் நிலையில் நம்பிக்கை நிதியத்தினூடாக கபூரிய்யா தொடர்ந்து வருவாய் பெற வேண்டும் என்னும் நன்நோக்கில், அக் காணியை தகுந்த தொகை வாடகையில் குத்தகைக்குப் பெற்று அபிவிருத்தி செய்வதற்காக நாம் அதன் நம்பிக்கையாளர் சபையுடன் உடன்பாட்டுக்கு வந்தோம்.

உயர்ந்த நோக்கத்திலேயே நாம் இம் முயற்சியில் ஈடுபட்டோம். அப்துல் கபூர் நம்பிக்கையாளர் சபையினருக்கும், வேறு அமைப்புக்களுக்குமிடையே முரண்பாடுகளும், சிக்கல்களும், இழுபறிகளும் இருப்பதை நாம் அப்போது அறிந்திருக்கவில்லை.

இதில் பெரும் பிரச்சினைகள் இருப்பது பின்னர் அறியவந்ததும் இந்த குத்தகை உடன்படிக்கையை நாம் ரத்துச் செய்துவிட்டோம்.

எங்களது எண்ணம் உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்ததுவேயன்றி வேறெதுவும் எமக்கு இருந்கவில்லை. எனவே வீணான வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் நிலைமையை விளக்கினர்.

1 comment:

  1. சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் தெளிவை வழங்கியமைக்கு Jaffna Muslim இற்கு நன்றிகள்.......

    ReplyDelete

Powered by Blogger.