Header Ads



முற்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கு, மைத்திரி செல்வாரென நான் நம்பவில்லை - மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வார் என நான் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகல் கோயில் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் 8ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினால் திட்டமிட முடியாதெனவும் அதனை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன் தான் முழுமையாக எதிர்க்கட்சி சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், நாடாளுமன்றத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக செயற்படுவதற்கே வந்ததாகவும், அவ்வாறே தான் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அனைவரும் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடனேயே எதிர்க்கட்சியில் செயற்படுவதாகவும், அதற்காக ஒரு சின்னம் அவசியம் என்பதனால் தாம் தாமரை மொட்டு சின்னத்தில் கட்சி ஒன்றை உருவாக்கியதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தாமரை மொட்டு இணைவது யாருக்கு பிரச்சினை ஏற்படாதெனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.