Header Ads



அனைத்து இலங்கையர்களுக்கும் பெப்ரவரி, தொடக்கம் மின்சுகாதார அட்டைகள்

இலங்கையில் வாழும்  21 மில்லியன் மக்களுக்கும் மின்-சுகாதார அட்டைகளை  விநியோகிக்கும் பணி அடுத்தமாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் பண்டாரகம பிராந்திய வைத்தியசாலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மின்-அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

ஆறுமாதகாலப் பகுதிக்குள் அனைவருக்கும் இந்த மின்-அட்டைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் இவ்வாறு மின்-சுகாதார அட்டைகளை பெற்றுக்கொடுத்த நிறுவனமொன்றே இவ்வேளைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. 

மின்-சுகாதார அட்டையில் நோயாளி ஒருவரின் முழுமையான விவரங்கள் உள்ளடக்கப்பட உள்ளதால் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும், எந்தவொரு வைத்தியரிடமும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும். 

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் 71 வது ஆண்டு விழாவில் இலங்கையில் நடைபெற்றது. இதன்போது மின்-சுகாதார அட்டை அறிமுகம் செய்யப்பட தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் மக்களுக்கு சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை, நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளின் தரவுகளை கணினி மயப்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுப்பதே தமது இலக்கு என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். 

1 comment:

  1. its not min suhadara attai.its ilathinaniyal suhadara attai. open ur eyes and publish.i know u ll not publish this .

    ReplyDelete

Powered by Blogger.