Header Ads



வடக்கு ஆளுநரும், சம்பந்தனும் சந்திப்பு (படங்கள்)


புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08) மாலை இரா.சம்பந்தன் அவர்களின் கொழும்புவாசஸ்தலத்தில் இடம்பெற்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வடக்கிற்கான ஆளுநராக நேற்று நியமனக் கடிதத்தினை  பெற்றுக்கொண்ட கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இச்சந்திப்பு அமைந்திருந்தது.

இந்தத சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் உடனிருந்தார்.




No comments

Powered by Blogger.