Header Ads



கிழக்கு ஆளுனர் நியமனத்தை, இனவாதமாக பார்ப்பதை நிறுத்துங்கள்

அரசாங்கத்தின் இழுபறி நிலைக்கு பிறகு ஜானதிபதியால் இலங்கையிலுள்ள மாகாணங்களுக்கு ஏலவே நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் இராஜினாமா செய்யப்பட்டு புதிய ஆளுநரை நியமித்ததன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் தமிழ் பேசும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை  நியமித்த என்பது வரலாற்று சாதனை பெரும்பான்மையாக முஸ்லீம் தமிழ் மக்கள் வாழும் மாகாணத்திற்கு இதுவரை காலமும் தமிழ் பேசும் ஒருவரை நியமிக்க முடியாமல் இருந்த அரசுகள் அவ்வாறே வட மாகாணத்தில் அதிகமாக தமிழ் மக்களை பிரதி நிதித்துவ படுத்தி வட மாகாணத்தை தமிழர் ஒருவரை நியமிக்க முடியாமல் இருந்த நிலையில் வட மாகாணத்திற்கும் தமிழ் பேசும் தமிழர் ஒருவரை நியமித்திருப்பது வர வேற்க்கத்தக்க விடயம்

கடந்த காலங்களின் வட கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஆளுனர்களே நியமிக்கப்பட்டு எமது மாகாணக்கிலுக்குரிய மாகாண சபைகள் இருந்தும் அதற்கான அதிகாரங்களில் மக்கள் பிரதி நிதிகளாக முதல் அமைச்சர் முதல் உறுப்பினர்கள் வரை எவ்வித நிர்வாக நடவடிக்கைகளையும் செய்ய விடாமல் தடுத்து மழுங்கடித்த நிலையில் எமது நிலங்கள் துண்டாடப்பட்ட நிலையில் யுத்தத்தின் பின்பும் கூட எமது தமிழ் பேசும் ஒருவரை நியமிக்காமல் எமது மக்களின் அபிலாசைகளை அரசின் கை பொம்மைகளாக கட்டுக்கோப்புக்குள் வைத்திருந்த பொழுது இன்று முஸ்லிம் ஒருவர் கிழக்கில் நியமித்திருப்பது தொடர்பாக ஒரு சில தமிழ் சகோதரர்கள் முஸ்லிம் தமிழ் சமூகத்துக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்திம் நிலையில் முகநூல் மற்றும் செய்தி வலை தளங்களூடாக ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக வேண்டும் என்ற விசன கருது வெளியிடுவதும் குறிப்பாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணை அம்மான் வெளிப்படையாக கிழக்கு முஸ்லிம்களின் ஆளுகைக்கு உற்படுகின்றது கூறி இனவாதத்தை தூண்டுவதும் மேலும் இணைந்து வாழும் தமிழ் முஸ்லிம் சமூகத்தை பிளவு படுத்தி அரசியல் இலாபம் தேடும் முயற்சியாகவே பார்க்கலாம் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட பொழுது ஏன் இவர்களால் எதிர்ப்பை காட்ட முடியவில்லை 

இன்னும் இரு சமூகத்தையும் பிரித்து ஆளும் நடவடிக்கையில்தான் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் இதானல் முழு தமிழ் சமூகத்தையும் நாம் குறைகூற முடியாது தொடரும் நடவடிவக்கை இரு சமூத்தையும் பிளவு படுத்துவதன் மூலம் மீண்டும் எம்மை ஆளுகின்ற பெருமைப்பண்மை சமுகத்தின் சிந்தனைக்கு வித்திட்டு வட கிழக்கு மாகாணத்தை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் 

வட மாகாண தமிழ் ஆளுநர் சுரேனின் நியமனத்தை  நாம் வர வேற்கின்றோம் தமிழர் அதுவும் தமிழ் பேசும் ஒருவர் எந்தவொரு முஸ்லிமும் அவரின் நியமத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடவில்லை ஆனால்  ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமனம் தொடர்பாக அவரது மாவட்டத்திலே உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மஹிந்தவின் அடிவருடிகளாக இருந்தவர்களே இரு சமூகத்தையும் தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கின்றனர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரே இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக இருந்தார் மீண்டும் பெருபான்மை ஒருவரே நியமிக்கக்க வேண்டும் என்று  சிங்கள மக்களோ பெரும்பான்மை அரசியல் வாதிகளோ நினைக்ககாவிடத்து  ஏன் சிறு பான்மை இனத்தை சேர்ந்த ஒரு சிலர் தமிழ் சகோதர்கள் நினைப்பது வெள்ளையன் ஆட்சியில் கட்டபொம்மனை சொற்ற சுகபோகத்திற்க்காக காட்டி கொடுத்த எட்டப்பர்களாக செயற்படுவது இறுதியில் இரு சமூகமும் அழிந்துபோகும் நிலையை மறந்து செயற்பட முடியாது 

நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதி நிதித்துவ படுத்துபவனாக இருந்தாலும் தமிழ் பேசும் எவர் நியமிக்கப்பட்டாலும் கட்சி பேதத்திற்கு அப்பால் ஏற்றுக்கொள்வோம் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குள் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் உறவுகள் பேணப்பட்டு பட்டத்தை நாம் மீண்டும் ரணில் விக்ரம சிங்க தலைமையிலான அரசாங்க உருவாக்கப்பட்டதிலிருந்து புரிந்து கொள்ளலாம் 

அவ்வாறு இருக்கும்போது ஒரு சிலரே மஹிந்தவின் ஏஜெண்டுகளாக பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்,மேல் மாகாணத்தில் அதிகமாக வாழும் பெரும்பான்மை சமூகம் ஆளுனராக நியமிக்கப்பட்ட அஸாத் சாலியை ஏற்றுக்கொள்ளும்போது ஏன் ஒன்றாக கிழக்கில் வாழும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது 

நாம் வட கிழக்கில் ஒன்று பட்டு எமது சொந்த நிலங்களை காணிகளை மீட்டுக்கொள்ள எம்மை நாமே ஆளுவோம் என்ற நிலையை உணர்ந்து எமது சமூகத்தின் விடிவுக்காக ஒன்று பட்டு பயணிப்பதால் மாத்திரமே எமது அரசியல் அதிகாரம் சுய நிர்ணயம் போன்றவற்றை வென்றெடுக்க முடியும் என்பதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ராஜாங்க சுகாதார அமைச்சர் பைசல் காஸிமின் இணைப்பு செயலாளருமான ஆர்.எம்.அன்வர் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார் 

No comments

Powered by Blogger.