January 18, 2019

புத்தளத்தில் வெடிபொருட்களுடன் கைதானவர்களை, தடுத்துவைத்து விசாரணை (வீடியோ)

புத்தளம் – வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லையில் அண்மையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் தென்னம் தோப்பு ஒன்றில் மறைந்திருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கு ஏற்ப, விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் நேற்று (17) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்த 20 முதல் 25 வயதிற்கு இடைப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தங்கியிருந்த இடத்தை தொடர்ந்து பரிசோதித்த போதே புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

100 கிலோகிரோம் வெடிபொருட்கள் அடங்கிய 3 பெரல்களும், நைட்டிக் திரவியம் அடங்கிய 6 பெரல்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

99 டெட்டனைட்டர்களும், வாயு ரைஃபில் ஒன்றும், ஒரு வேட்டைத் துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 7 தோட்டாக்களும் நவீன ரக கெமரா ஒன்றும் மடிக்கணணி ஒன்றும் தமிழ் மற்றும் அரபு மொழியில் அச்சிடப்பட்ட புத்தகங்களும் வீசா அனுமதிச்சீட்டு உள்ளிட்ட பல பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நால்வரில் தென்னந்தோப்பு உரிமையாளரின் மகனும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தலைமையில் இன்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு ஏற்ப 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவின்படி சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 கருத்துரைகள்:

யா அல்லாஹ் இது என்ன சதியோ?

150 naal visarikka vendum full group and supporter all need to arrest and give a high level punishment

parents should watch their child activity so carefully

If it is true maximum punishment should be given.Its threat to peace loving people Muslims. Muslims politicians leaders should take serious action

சந்தேகமில்லை....இலங்கையில் ISIS....

மறைமுகமான சதிகளை பற்றி எந்த சமூகமும் அறிந்து கொள்வதில்லை அரசியல் மற்றும் இனவாத சதிகள் பொது மக்களுக்கு புல படாத ஒன்று எனவே எந்த சமூகத்திலும் பணத்துக்கு விலை போகும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. முஸ்லீம் சமூகம் தற்போது எல்லா விடயங்களிலும் மிக அவதானமாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது இன்று முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் சமூகத்தையும் தூண்டிவிடும் ஒரு பயங்கர சதியும் அரங்கேறி கொண்டு இருக்கின்றது எனவே இவற்றில் இருந்து மீள வேண்டுமாயின் உலமா சபைகள் புத்திஜீவிகள் சமூக நலன் விரும்பிகள் மற்றும் ஒவ்வொரு முஸ்லீம் பிரதேசங்களிலும் உள்ள நன் மக்கள் சமூக விழிப்புணர்வையும் நாட்டு சட்ட விதிகளை பற்றியும் அறிவுறுத்த வேண்டும் இஸ்லாம் எந்த இனவாதத்தையும் ஆதரிக்க வில்லை தீவிரவாதத்தையும் ஆதரிக்கவில்லை இஸ்லாம் மீதும் இஸ்லாமிய சமூகத்தின் மீதும் உண்மையான பற்று இருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் முதலில் நாட்டின் சிறந்த குடி மகனாக வாழ பழகட்டும் மற்ற இனங்களோடு சேர்ந்து விட்டு கொடுத்து வாழ பழகட்டும் நாட்டுக்கு நாட்டின் வளங்களுக்கு மாறு செய்யாமல் வாழ பழகட்டும் ..போதை வஸ்து , கள்ள கடத்தல், விற்பனை மோசடி செய்யாமல் வாழட்டும் அப்போது ஒரு மாற்றம் வரும்...
..எந்த சமூகத்தில் தான் அகோரிகள் இல்லை ..எல்லா சமூகத்திலும் உண்டு மனிதன் என்ற ரீதியில் எல்லோரும் பிழைகள் செய்பவர்கள் தான் ஆனால் ஒரு முஸ்லீம் செய்தால் அதனை தூக்கி பிடித்து தூபம் போடும் காரணம் இஸ்லாம் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி இஸ்லாமிய சட்டங்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி மட்டுமே எனவே தயவு செய்து உலமா சபை இது விடயமாக அவசரமாக கலந்து ஆலோசித்து சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாம் நடந்த பிறகு குனூத் ஓதுவதில் பயனில்லை வெள்ளம் வரும் முன் அணையை கட்ட வேண்டும் ...இன்று நமது இளைஞர்கள் யாரோடு தொடர்பு கொள்கிறார்கள் யாருக்கு விலை போகிறார்கள் போதை, தீவிரவாதம் என்று ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்று ஒவ்வொரு பெற்றோரும் அவதானிக்க வேண்டும் ..எனவே இது எல்லோரும் செய்ய வேண்டிய அவசியமான கடமை ...அரசியல் வாதிகளை மற்றும் குறை சொல்லி கொண்டிருக்க வேண்டாம் ..நமக்கு சமூக அக்கறை தேவை ..இல்லாவிட்டால் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய் விடும் சிலைகளை உடைப்பதினால் யாரும் திருந்தி அல்லாஹ்வுக்கு மாறு செய்யாமல் இருக்க போவதில்லை..அல்லாஹ் இதாயத்தை அவன் பொறுப்பில் தான் வைத்திருக்கான் .ஒரு முஸ்லீம் நல்ல அஹ்லாகோடு நல்ல பண்புகளோடு, மற்ற இனங்களோடு வாழ்ந்தால் அவர்களே எம்மை நோக்கி வருவார்கள் நபிகளாரும் , ஷஹாபாக்களும் அப்படிதான் வாழ்ந்து காட்டினார்கள் ...தீவிரம் என்பதை எதில் காட்டவேண்டும் எதில் காட்டக்கூடாது என்பதை நமது சமூகம் உணர வேண்டும் ...தயவு செய்து சமூகத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்ற அனைவரும் நல்ல எண்ணத்துடன் ஒன்று படுவோம்,

Post a Comment