Header Ads



சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த, அருந்திக பெர்னான்டோ மன்னிப்புக் கோரினார்


அரசியல் குழப்பங்களின் போது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

சிறிலங்கா அதிபரால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்றனர்.

கடந்த நொவம்பர் 16ஆம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்கள், சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்திருந்ததுடன், அதனை நெருங்க விடாமல் தடுத்தனர்.

அப்போது, சபாநாயகரின் ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ அமர்ந்திருந்தார்.

இதுகுறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அருந்திக பெர்னான்டோ வருத்தம் தெரிவித்தார்.

சபாநாயகரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், சபாநாயகர் பதவியையும், ஆசனத்தையும் தாம் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் ஆசனத்தில் அமர்ந்திருந்த போது, சபையில் செங்கோல் இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

1 comment:

Powered by Blogger.