Header Ads



தாமரை மொட்டிலே போட்டியிடுங்கள் - வலுக்கிறது போராட்டம்

அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் எந்த கூட்டணியாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் ஒன்றியத்தின் தலைவர் உதேனி அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனை அடங்கிய மகஜர் ஒன்றை அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் இன்று கையளித்துள்ளார்.

இந்த மகஜரை பெற்றுக்கொண்ட பசில் ராஜபக்ச செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சம்பந்தப்பட்ட பல தரப்பினரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அமைப்புகளும் இதே யோசனையை முன்வைத்துள்ளன. இந்த யோசனை குறித்து எமது தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் எம்முடன் இணைந்து போட்டியிடும் சகோதர கட்சிகளுடன் கலந்துரையாடி பொறுத்தமான தீர்மானத்தை எடுப்போம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முன்வைத்துள்ள இந்த யோசனை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். எமது தலைவர் சிறந்த முடிவை எடுக்க இடமளிப்போம். இதுதான் எனது தனிப்பட்ட முடிவு.

நாங்கள் உட்கட்சி ஜனநாயகத்தை மதிக்கின்ற கட்சி என்ற வகையில் எமது சகோதர கட்சியை மறக்க முடியாது.

எமது சகோதர கட்சிகளுடன் இணைந்தே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டோம். அந்த கட்சிகளுக்கு தலைவர்கள் பதவிகள் மேயர் பதவிகளையும் வழங்கினோம். அவர்களும் தாமரை மொட்டுச் சின்னத்தில் பெருமையை அறிவார்கள். எதிர்காலத்தில் இது சம்பந்தமாக நியாயமான சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.