Header Ads



இன வன்முறையினால் பாதிக்கப்பட்ட என்டருதென்னயில் மின்சார இணைப்பே இல்லாத, முஸ்லிம் சகோதரரின் களஞ்சியசாலை தீயில் நாசம்

கடுகஸ்தோட்ட-  வெறல்லகம - என்டருதென்ன  பகுதியில் இயங்கி வரும்  ஆடைத்தொழிற்சாலை
ஒன்றின் களஞ்சியசாலை  தீக்கிரையான சம்பவம் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் இன்று  (8)  அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவம் இடம்பெற்று ஒருசில மணித்தியாலங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஊர் மக்களின் உதவியுடன் சில  மூலப்பொருட்களில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட போதிலும். அதிகமான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.

மிஹ்லார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் களஞ்சியப்படுத்தி  வைக்கபட்டிருந்த சனீர் என்பவரால் நடாத்தப்படும் ஆடைத்தொழிற்சாலையின் பொருட்களே தீ விபத்தில் நாசமாகி உள்ளது.

 விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. அதேவேளை  தொழிற்சாலையின் தீப்பற்றிய அறைகளில் மின்இணைப்பு இல்லை என தொழிற்சாலை உரிமையாளர்கள் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது. கட்டுகஸ்தோட்டை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ்மீர் ஸறூக்-

2
Hafeez

கட்டுகாஸ்தோட்டைப் பொலீஸ் பிரிவிலுள்ள என்டருதென்ன என்ற கிராமத்தில் ஒரு களஞ்சிய சாலை தீப்பற்றியுள்ளது. (8.1.2019)
ஒரு வீட்டின் பின்புற மேல்மாடியில் களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆடை உற்பத்திப் பொருட்கள் மேற்படி தீ விபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளன.
கடந்த மார்ச் மாத வன் முறையில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான என்டருதென்னயில் அப்போது ஒரு அகதி முகாமும் இயங்கியமை குறிப்பிடத்தக்கது. கண்டி மாவட்டத்தில் பாரிய பாதிப்பை எதிர்கொண்டு தற்போது சுமுக நிலைக்கு வந்துள்ள ஒரு கிராமம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீவிபத்திற்கான காரணம் இன்னும் சரியாகத் தெரிய வில்லை. கட்டுகாஸ்தோட்டைப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.