Header Ads



ஹிஸ்புல்லாவை நியமித்தமையால், சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுமாம்...!

மூவின மக்களும் சமாதானமாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் நடுநிலையாக செயற்படாத ஒரு அரசியல்வாதியை ஆளுநராக ஜனாதிபதி நியமித்தமை எதிர்காலத்தில் சமாதனத்திற்கு குந்தகம் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

ஜனாதிபதி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த தமிழ் பேசும் மக்களிற்கு ஜனாதிபதியின் பிரதி உபகாரமாக ஆளுநர்கள் நியமனத்தை நாம் நோக்கினாலும் மேல் மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இரண்டு முஸ்லீம்களை நியமித்துள்ளார்.

ஆயினும் வடக்கிற்கு மாத்திரம் ஒரு தமிழரை ஆளுனராக நியமித்து அதிலும் பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது.

இது முஸ்லீம்களின் ஆதரவை எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளும் செயலானாலும் தமிழ் மக்களுக்கு பாராபாட்சம் காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் நேரடியாக இனவாதகருத்துக்களை கக்கிய ஒருவரை கிழக்கின் ஆளுனராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இனங்களுக்குள் ஒரு நடுநிலையாக செயற்படுவாரா? என்ற கேள்வி எம் மத்தியில் காணப்படுகிறது.

திருகோணமலை மூதூர் சூடைக்குடா மத்தளமலை முருகன் ஆலயத்தினை உடைப்பேன் என்று முன்னாள் ஆளுனர் ரோகித போகொல்லாகம அவர்களின் மனைவியார் கூறி அவ்வாலயத்திற்கு சென்று அதிகார செயல்களில் ஈடுபட்ட போதும் ஜனாதிபதி அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்.

இன்று மட்டக்களப்பு காளி கோயிலை உடைத்த ஒருவரை ஆளுனராக நியமித்துள்ளார். அவ்விடயங்கள் தமிழ் மக்களின் மீது ஜனாதிபதி பாராபட்சமாக நடக்கிறார் என்பதை தொட்டத் தெளிவாக உணர்த்துகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. ஹிஸ்புல்லாஹ் இனவாதியென்றால் இலங்கையில் இனவாதம் பேசாத எவனாவது ஒரு அரசியல்வாதியையாவது காட்ட முடியுமா? உங்களுக்கு முஸ்லிம்களை ஆளுநராக ஏற்றுக்கொள்ளமுடியாத இனவாத பயங்கரவாத தமிழனுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உங்களைப்போன்ற ஒரு கேவலமான சமூகம் உலகில் எதுவுமில்லை

    ReplyDelete
  2. ஓகே, இவ்வளவுதானா மேட்டர். சரி, ஜனாதிபதி பக்கச்சார்பா நடக்கார். இப்ப என்ன பண்ணலாம்?

    ReplyDelete
  3. Eastern province all three communities living peacefully only the Muslims predominantly lives there. We cannot understand why appointment of a Muslim is threat to coexistence.
    Number of Buddhist those who were operational area were governors. This time only a Muslim appointed.
    Hon Hisbullah once sacrificed his opportunity to become chief minister to Mr Pillayan
    We minorities first practice coexistence among us.Only for the reason new governor A MUSLIM it will not be threat to peace and coexistence

    ReplyDelete
  4. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் கருத்தில் இனவாதம் மாத்திரம் கக்கப்படுகிறது. மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் பொறுப்பானவர்கள் இவ்வாறு இனவாதம் பேசி மக்களை ஒருஇனம் மற்றறொரு இனத்துக்கு எதிராக வன்செயலைத்தூண்டுவது தான் இந்த நாடு இ்ப்​போது எதிர்நோக்கும் அவலம்.

    ReplyDelete
  5. Kilakku maganam Muslim makkaludayathu..

    ReplyDelete

Powered by Blogger.