January 13, 2019

அப்துர் ரஹ்மான், மௌனம் காப்பது ஏன்..?

இலங்கை வரலாற்றில் சிறுபாண்மை இனத்தை சேர்ந்த தமிழ் பேசும் முதல் கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பதவியேற்றுக் கொண்ட பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நிகழ்வொன்று கடந்த வாரம் அதிரடியாக இடம்பெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தின் முழு அதிகாரமும் நிறைந்த ஆளுநர் பதவியானது (மாகாண அரசில்லா நிலையில்) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு கிடைத்த பின்னர் இதுவரை அவருக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ வாழ்த்துக்களையோ or பல்லின சமூகம் சார்ந்த இனவாதத்திற்கு எதிரான ஆதரவையோ காத்தான்குடியை தளமாக கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உத்தியோக பூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்பது இங்கு அவதானிக்கத்தக்கது. 

குறிப்பாக, சிறுபண்மையினத்தை சேர்ந்த ஒருவருக்கு இப் பதவி கிடைத்த இவ்வாறான சந்தர்ப்பத்தில், சிறுபான்மையினரின் ஏராளமான பிரச்சிணைக்கு குறிப்பாக காணிப் பிரச்சினைக்கு ஒரு இணக்க அரசியலின் ஊடக பல தீர்வுகளை பெறக்கூடிய நிகழ்தகவு அதிகமாகவுள்ள நிலையில் இவர்களின் இம் மெளனம், அப்துர் ரஹ்மான் சார்ந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை புடம்போட்டு காண்பித்துள்ளது.

ஆனால், ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கடந்த கால அரசியல் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை மாத்திரமன்றி தமிழ், சிங்கள மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றிய கூடிய ஆளுமை மிக்க ஒருவரே இவர். குறிப்பாக இவர் அமைச்சராகவிருந்த காலங்களில் பாரிய அபிவிருத்தி, பாரபட்சமின்றிய சேவை என அனைவராலும் போற்றப்பட்ட ஒருவர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த யுத்த காலத்தின்போது புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மௌனம் சாதித்ததை போன்று ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆளுநர் நியமானத்திற்கு பின்னர், இனரீதியான முன்னெடுப்புக்களை தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சில இனவாதிகள் அண்மைய நாட்களில் முன்னெடுத்தபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை போன்று அதனோடு நல்லிணக்க அரசியல் என்ற பெயரில் நெருக்கமான உறவை பேணும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், அப்துர் ரஹ்மானும் மௌனியாக இருந்த இச் செயற்பாடு  அப்துர் ரஹ்மான் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரின் மீது காத்தான்குடியில் எதிர்மறையான விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.

- Mohamed Nisfer - 

4 கருத்துரைகள்:

சும்மா இருங்கையா. வயிற்றெரிச்சலைக் கிழப்பாம! மனிசன் எவ்வளவோ யோசனையில் இருக்கான்.

Mr.Nisfar Hisbullah vukku alunar pathavi kidaithalum sari prime minister pathavi kidathalum sari avarala namma society ku oru mayirayum avarala pidungi thara mudiyathu athakku mukkuvan vidayum mattan avarukku mudiymana vidayam ennavenral mukkuvano seenavo engavathu palliyayo allathu engada matharasakkalayo udaithu tharamattamakkinalo appadi oru sampavamum nadakkaveyillai enru oodahangalukku petti alippar. Appadi eatkanave nadanthu kodathatkaha perinavathihalal kodukkappatta mullu thunde intha alunar patviyum mumbu kodukkappatta amaichu poruppukkalum. Itharku NFGG yo Rahumano entha comence o pannavendum enra entha avasiyamum illai. Ippa kidaitha alunar pathaviya vaithavath kattankudiyil etpattirukkum kuppai pirachinakkavavathu theervai thanthu kilippara puthiya alunar. Ana samooham enru varumpothu oru muslimikku alunar pathavi kidaithathu nalla vidayam ana hisbullah vukku kidaitha pathaviyai vaithu 99 percentage anupavitthathu mukkuvanum seenavum than enpathai ungalal marukka mediums. But Mr. Rahuman o NFGG team o appdippattavarhalalla.

சகோதர் முகம்மமட் நிஸ்பர் அவர்களே
கலாநிதி ஹிஸ்புல்லா அவர்களின் நியமனம் பற்றி பெரிதாக தலையில் தூக்கி வைத்து கூத்தாட தேவையில்லை. எம்மைப்பொறுத்த வரை பொறுப்பான பெரிய பதவிஒன்றுக்கு எமது நாட்டிலே ஒருவர்
நியமிக்கப்பட்டால் அவர் சார்ந்த சமூகத்தவர் மட்டுமல்ல ஏனய சமூகத்தவரும் அவரை வாழ்த்தி போற்றி அவரை உட்சாகப்படுத்த வேண்டும்.அதுதான் அப்பதவிக்கு அவருக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும்.
ஆனால் ஹிஸ்புல்லா அவர்களுக்கு
இந்த அங்கீகாரம் கிடைக்காமை அவர்
சார்ந்த எமது சமூகத்தின் துர்பாக்கயமாகவே நாம்கருதிகிறோம்.
ஒரு இஸ்லாமிய தலைமை எவ்வாறு
இருக்கவேண்டும் என்பதுடன்,அதன்பண்புகள் குணாதிசியங் என்பவைகள் அவரிடம்
இருந்து வெளிப்படவில்லை எனன்பதினால்தான் அவருக்கு இந்த
அங்கீகாரம் மறுக்கப்பட்டது என நாம்
எடுத்துக்கொண்டால் அவரின் நியமனத்தை நாம் எப்படி பாராட்ட முடியும்.? கடந்த காலங்களில் அவர் ஒரு
அரசியல் வாதியாகசெயல்பட்டு தனது
வாக்கு வங்கியை பராமரித்துக் கொள்வதிலே கருத்தாக செயல் பட்டாரே தவிர அதற்கு அப்பால் அவரது
கவனம் செல்ல வில்லை. இதை உதாரணமாக அவர் வாயாலே மற்ற சமூகத்தவரின்
நிலங்களை தனக்கு கிடைத்த அதிகாரத்தைக்கொண்டு தனக்குவாக்களித்த அல்லது தனது
ஊர் மக்களுக்கு கபளீகரம்செய்து வழங்கியதாக அவர் கூறிய
வாக்குமூலங்களை கேட்டு மிகவும் துக்கமடைந்தோம். இனஜக்கியத்தை
வளர்க்க வேண்டியவர்கள் அதை சுக்கு
நூறாக உடைப்பதற்கு வித்திட்டால்
இதை எவ்வாறு ஜீரணிப்பது.
அதுமட்டுமல்ல சிறீலங்க முஸ்லீம்காங்
கிரசில் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களோடு இணைந்து 1987களில்
தேர்தல் பிரச்சார மேடைகளில் அழகான துடிப்புள்ள இளம் வாலிபனாக தோன்றி கட்சிக்கோட்பாடுகளையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் அதன் எதிர்கால
திட்டங்களையும் சட்டங்களையும் எம்போன்ற அப்போதய இளைஞ்ஞர்கள் உள்வாங்குமளவிற்று
உரையாற்றியதன் மூலம் தலைவர்
அஸ்ரப் அவர்களுககுப்பிறகு இந்தக்கட்சியின் தலைவானாக வரக்கூடிய பக்குவதத்தையும் பண்பையும் ஹிஸ்புல்லாவில் நாம்கண்டு முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காக எம்மை அன்று
அர்பணிக்க முன்வந்தோம்.தேர்தல் முடிந்தது எம்பியாக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லா
ஒருவருடத்தின்பின் கட்சிக்கும் தலைவருக்கும் வழங்கிய வாக்குறிதிகளை உடைத்தெறிந்து
பதவிமோகத்திலும் சுயநலத்திலும்
மூழ்கிய இவர் அதிலிருந்து இன்னும்
மீளவில்லை என்பதுதான் ஹிஸ்புல்லா
பற்றிய எம்போன்றவர்களின் கணிப்பாகும். தலைமைத்துவ கட்டுப்பாடு உடைக்கப்பட்டு பதவிமோகமும் சுயநல அரசியலும் பிரதசவாதங்களும் இவரின் நடத்தையினால் ஒன்று சேர்ந்து அன்று நிலை தடுமாறிய முஸ்லீம்காங்கிரஸ் இன்று வரை அதிலிருந்து மீளமுடியாமல் சின்னாபின்னமாமகி சீரழிந்ந்து கொண்டிருக்கின்றது என்பதை அதன்
ஆரம்பகால போராளிகளான எம்போன்றவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
ஹிஸ்புல்லா அன்று தன்னை தலை
மைத்துவ கட்டுப்பாட்டுக்காகவும்,
வாக்குறிதிக்காகவும் தனது பதவி மோகத்தை தூக்கி எறிந்து இக்கட்சிக்காக சமூகத்துக்காக தன்னை அர்பணித்திருந்தால் இன்று முஸ்லீம்
காங்கிரஸீனுடைய நிலையும் அதன்
ஆதரவுத்தளங்களும் இந்தநாட்டிலே
எல்லா மக்களுக்கும் நேசக்கரமாய்
அமைந்திருக்கும். இருந்தும் ஹிஸ்புல்லா
அவர்களுக்கு கிழக்கு மாகாணத்திலே
எல்லா மக்களையும் அரவணைத்து
செல்லக்கூடிய சந்தர்ப்பமும் இதன் முலம் ஏனய மாகாணங்களுக்ககு ஒரு
முன்மாதிரியை வழங்கக்கூடிய வாய்ப்பும் மறுபடியும் கிடைத்துள்ளது.
பயன்படுத்தி பேரெடுக்க வாழ்த்துகிறோம்.

Post a Comment