January 14, 2019

சிங்கள - முஸ்லிம் அரசியல்வாதிகளே, தம்புள்ள பள்ளிவாசல் நெருக்கடிக்கு காரணம்

‘சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் தலை­யீட்­டி­னா­லேயே தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­ம­லி­ருக்­கி­றது.  தம்­புள்ளை முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி இப் பிரச்­சி­னைக்கு தாம­த­மில்­லாமல் தீர்வு காண வேண்டும்’ என தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரி­வித்தார்.

தம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை தம்­புள்ளை ஓய்வு விடு­தியில் (ரெஸ்ட் ஹவுஸ்) இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பிர­தி­நி­திகள், தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத ஆகியோர் கலந்து கொண்­டனர். வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்பில் வின­வி­ய­போதே தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்;

‘நாட்டில் இடம்­பெற்ற 30 வருட கால யுத்­தத்தில் வடக்கு, கிழக்கு பகுதி முஸ்­லிம்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். வடக்­கி­லி­ருந்து அவர்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். அவர்­க­ளிடம் கப்பம் அற­வி­டப்­பட்­டது. பலர் உயிர்­களைப் பலி கொடுத்­தனர். நாட்டில் மீண்டும் இவ்­வா­றான நிலை உரு­வாகக் கூடாது. முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் நல்­லு­ற­வுடன் வாழ­வேண்டும். அதற்கு பிரச்­சி­னைகள் சுமு­க­மாகத் தீர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும்.

வெள்­ளிக்­கி­ழமை நடந்த கலந்­து­ரை­யாடல் எவ்­வித தீர்­மா­னங்­க­ளு­மின்றி முடி­வுற்­றது. தொடர்ந்தும் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நலன்­க­ருதி பிரச்­சி­னைகள் சுமு­க­மாக தீர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும். சிங்­கள மற்றும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தங்­க­ளது சுய­ந­லன்­க­ரு­தியே தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் செயற்­ப­டு­கின்­றனர். அவர்கள்  தூர­நோக்­கோடு செயற்­பட வேண்டும் என்றார்.

6 கருத்துரைகள்:

நீங்கள் ஏன், எப்ப பார்த்தாலும், மற்றய மதங்களில் சொறிந்து கொண்டிருக்கிறீர்கள்?

இலங்கையில பௌத்தர்களின் புனிதபூமிக்குள் போய் உங்கள் பள்ளிவாசல்களை கட்டுகறீர்கள், அங்கு இந்தியாவில் ராமரின் புனிதபூமி (அயோத்தி) யில் பள்ளிவாசல் கட்டுகிறீர்கள்.

We are muslims ok but your sinhala extrimes making problems always.Give mosque lane Dambulla city area then we can build new mosque.

@அந்தோணி சிங்களவனின் நாட்டில் வந்தேறி தமிழன் தனி நாடு கேட்பதும் இதற்க்கு பொருந்தும் தானே......

அந்தோனி பச்சைத் துவேஷம்தான் உனது வாயிலிருந்து எப்போதும் வருவதாகவுள்ளது

அந்தோனி நாங்கள் புதிதாக அந்த இடத்தில் பள்ளிவாசலை கட்டவில்லை. பல வருடங்களாக அந்த இடத்திலேயே இருக்கின்றது. தயவு செய்து இனவாதத்தை பரப்ப வேண்டாம்.நீங்களும் இந்த நாட்டில் சிறுபான்மையினரே. உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் விளக்கும்.

Dear Muslim friends,

அது சரி...,தான் நில மோசடி செய்து, ஒரு இந்து கோவிலை உடைத்து, அந்த காணியை முஸ்லிம்களுக்கு கொடுத்ததாக பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்தவரை நீங்கள் ஆதரித்து, தலைவராக கொண்டாடுவதிலே தெரிகிறதே உங்கள் பொதுநலமும், நேர்மையும்.

அதனால், தம்புள்ளை பள்ளிவாசல் காணியும் அதே வழியில் பெறப்பட்டிருக்கலாம் என்று நிணைப்பதில் தவறா?

Post a comment