Header Ads



கதுருவெலயில் தீக்கிரையான, கடைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

பொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் 7 கடைகள் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இணைந்து தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 comments:

  1. நாட்டின் எல்லா பாகங்களிலும், ஊர்களிலும் முஸ்லிம்களின் கடைகள் கடந்த 4 -5 வருடங்களாக தொடர்ந்து தீப்பற்றி எரிகின்றன. காவல்துறையோ அல்லது பொறுப்பானர்களோ அல்லது கடை சொந்தக்காரர்களோ தீப்பற்றி எரியக்காரணங்களைக்கூறுவதில்லை. இறுதியில் அவை மின்சாரக் கோளாறு என இலேசாகக் காரணம்கூறப்படுகின்றது. இந்த அழிவின் பின்னணி என்ன? ஏன் இந்தத்தீ தொடர்ந்து முஸ்லிம்களனின் கடைகளை மட்டும் தாக்குகிறது, அதன் உண்மைக்காரணம், நோக்கம் என்ன என சமூகத்தில் எந்த நபர்கள்,அல்லது இயக்கங்கள் ஆராய்வதற்கும் அவற்றை முடிவுக்குக் கொண்டுவர ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? அதுபற்றி ஒரு கவலையாவது இருக்கின்றதா என பார்த்தால் அதுபற்றி யாருக்கும் கவலையில்லாத வக்கில்லாத ஒரு சமூகமாக இந்த முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. நேற்று வெலிகமயில் முந்திய நாள் வேறொரு ஊரில், இன்று 7கடைகள் முஸ்லிம்களுக்குச் சொெந்தமானது என்றால் அதுபற்றி சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் என்ன செய்கின்றார்கள் எனக் கேட்கத் தோன்றுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல்பற்றியும் பதவியை இருத்திக் கொள்ளவும் திட்டம் போட்டுக் கொண்டிருக்க சமூக ஆர்வலர்கள் என தம்மைப்பற்றி சுயபுராணம் பாடிக் கொண்டுதிரியும் மார்க்கம் சார்ந்த ஏனைய இயக்கங்கள் எங்கே?

    ReplyDelete
  2. حسبن الله و نعملوط وكيل

    ReplyDelete

Powered by Blogger.