Header Ads



இந்திய தப்லிக் இஜ்திமா, 769 ஏக்கர் ஓதுக்கீடு - 19 இலட்சம் மக்கள் - இறுதித் தினத்தில் 200 திருமணங்கள்


- திருச்சியிலிருந்து MK ஷாகுல் ஹமீது -

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தாலூகா பகுதியில் உள்ள திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள இனாம்குளத்துரில் வருகிற 26, 27, 27 ஆகிய தேதிகளில்  மூன்று நாள் தப்ஃலீக் இஜ்திமா நடைபெறுகிறது. இந்த மாநாடு சுமார் 769 ஏக்கர் பரப்பில் நடைபெறுகிறது. 360 ஏக்கர் பரபரப்பில்  இருபக்கமும் நடந்து செல்வதற்கு போக 120 ஏக்கர் நிலபரப்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் 250 ஆடி, 100 ஆடி இடைவெளியில் விடப்பட்டுள்ளது.  240 ஏக்கர் நிலபரப்பில் தங்குவதற்கு இடங்கள், கழிப்பிடம் வசதி, சமையல் செயவது, குளிப்பதற்கும், மலிவு விலையில் கடைகளா அமைப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய முழுவதும் இருந்து வரக்கூடியவர்களுக்கு வாகனம் நிறுத்துவதற்கு வசதியாக 400 ஏக்கர் நிலபரப்பில் 7 இடங்களில் வாகன வசதிகள் நிறுத்துவதற்கு பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதோபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் இந்த இஜ்திமாவிற்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு உத்தரவிட்டார். மாநில அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப. குமார், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், ஆகியோர் அறிவுரை பேரில்  ரூ10 கோடி செலவில் திருச்சி - இராமநாதபுரம் கூட்டு குடிநீர் இணைப்பில் இருந்தும் அதேபோல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து 10 கோடி லீட்டர்  தண்ணீர் வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதோடு தீயணைப்பு வசதிகள், மருத்துவ முகாம், போக்குவரத்து வசதி, உள்ளிட்ட அனைத்து வசதிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த பணிகள் குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு என்னனென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்து கொடுத்தார். அதோபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த ஓரு மாதம் கலமாக அரசுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது இந்த திடலுக்கு வருகை தந்து பல்வேறு ஏற்பாடுகளை கவனித்து வந்தார்கள்.

அதோபோல பந்தல் அமைக்கும் பணியை அந்தந்த மாவட்டங்களில் சேர்ந்த தப்லீக் பொறுப்பாளர்கள் அவர்களே தளவாடங்கள் பொருட்களை கொண்டு வந்து பணிகளை செய்தார்கள். தானாகவே பல்வேறு இஸ்லாமிய மக்கள் மற்றும் இளைஞர்கள் பந்தலுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்துள்ளார்கள். மொத்தம் 7 மண்டலமாக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வருகை தரும் அனைவருக்கும் தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்க, லண்டன், சவுதி அரேபியா, துபாய், புருணை, கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து இந்த இஜ்திமாவில் கலந்து கொள்வதற்காக நிறைய பேர்களும் வந்துள்ளார்கள். இந்தியாவில் இருந்து ரயில் மூலம் வரக்கூடிய அனைவரும் இனாம்குளத்துரில் உள்ள ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கும் ரெயில்வே நிர்வாகம் மூன்று நாளைக்கு அனைத்து ரெயில்களும் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதோபோல திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில சிறப்பு பேருந்துகளும், தமிழக முழுவதும் இருந்து இனாம்குளத்துருக்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய தலைவர், செயலாளர் ஆகியோருக்கு வருகிற 26, 27, 28 ஆகிய தேதிகளில் திருச்சி இனாம்குளத்துரில் நடக்கும் தப்லீஃக் இஜ்திமாவில் கலந்து கொள்ள வரும் இந்தியா முழுவதும் வரும் அனைத்து வாகனத்தில் வருகை தரும் இஸ்லாமியர்களுக்கு மூன்று நாளைக்கு சுங்கசாவடிகளில் கட்டணம் வாங்கமால் விளக்கு அளிக்க வேண்டும் என்று இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அனாவர்ராஜா கடிதம் எழுதி அனுப்பினார். அதற்கு நெடுஞ்சாலை துறை நிர்வாகம் வருகிற 26, 27, 28, ஆகிய தேதிகளில் இஸ்லாமியர்கள் இஜ்திமாவிற்கு சென்று விட்டு திரும்ப போகும் சுங்கசாவடிகளில் கட்டணம் வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த மூன்று நாள் நடக்கும் இஜ்திமாவில் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரையில் தங்குவதற்கும், 19 லட்சம் பேர்கள் உட்கார்ந்து தினமும் பயான் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இஜ்திமாவில் குறைந்தது 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இஜ்திமா பொறுப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த மூன்று நாள் மாநாட்டில் தினமும் ஓவ்வொரு தலைப்பில் பயான்கள் நடைபெறுகிறது. சமய நல்லிணக்கத்தையும் உருவாக்கும் வகையில் அமைதி நிலவும் வகையில் சிறப்பு து ஆ செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி  தப்ஃலீக் இஜ்திமாவில் நிகழ்வில்  இறுதியில் நாள் அன்று 200க்கு மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது. இந்த தப்லீஃக் இஜ்திமாவுக்கு புதுடெல்லி மார்க்ஸ் இருந்து மவ்லவி முஹம்மது ஷாட் தலைமையில் 10பேர்கள் கொண்ட குழு இதில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் முஸ்லிம்கள் எப்படி தவாத் பணியில் ஈடுப்பட வேண்டும். போன்ற பல்வேறு தலைப்புகளில் பேச இருக்கிறார்கள்.

4 comments:

  1. How many millions are wasted in meeting.
    Spiritual cooling is good?
    Forget about bida?
    Forget about qualification of these people?
    After all; they do not need qualification to speak for Islam; about Islam and on Islam..
    Forget about how and why Indian government and saudi government encourage this group now ?..
    But think how many millions Indian Muslims are in poverty?..
    How many million widows in India?
    How many millions of orphans in India?
    How many million Muslims are unemployed in India?
    Why not all this money spent on this spiritual cooling spend on any of above ..

    ReplyDelete

Powered by Blogger.