January 04, 2019

மாவ­னெல்லை சிலை உடைப்பு, கைதான 7 சந்தேக நபர்களும் 3 நீதிமன்றங்களில் நீறுத்தப்படுவர்

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் உடைத்து சேத­மாக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பிலும் குரு­நாகல், -பொத்து­ஹர பகு­தியில் இந்துக் கடவுள் சிலை­களை சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரத்­திலும் இது­வரை கைதா­கி­யுள்ள ஏழு சந்­தேக நபர்­களும் தங்­க­ளுக்குள் ஒரு­வ­ருக்கு ஒருவர் தொடர்பில் இருந்­துள்­ள­மையை பொலிஸார் விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளனர். அதனால் இவர்கள் சிலை உடைப்பு விவ­கா­ரங்­களில் திட்­ட­மிட்ட குழு­வாக செயற்­பட்­டி­ருக்க வேண்­டு­மெனப் பொலிஸார் சந்­தே­கிக்­கின்ற நிலையில்,  அக்­கு­ழு­வுக்குத் தலைமை வகித்­த­தாக சந்­தே­கிக்கும் பிர­தான சந்­தேக நபரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தீவி­ர­பப்­டுத்­தி­யுள்­ளனர்.

கண்டி, கேகாலை அதி­ரடிப் படை­யினர் மற்றும்  உளவுத் துறை­யி­னரின் பங்­க­ளிப்­போடும் சி.ஐ.டி.யின் சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்­களின் ஆலோ­ச­னையின் கீழும் இந்த  நட­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக  பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

இத­னி­டையே இந்த சிலை­களை உடைக்க சந்­தேக நபர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் சுத்­தி­ய­லொன்றை பொலிஸார் தற்­போது கைப்­பற்­றி­யுள்­ளனர். சந்­தேக நபர்­களில் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து இது மீட்­கப்பட்­ட­தாக அறிய முடி­கின்­றது. கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்கள் அனை­வரும் மாவ­னெல்லை, தெல்­க­ஹ­கொட  மற்றும் அதனை அண்­மித்த ஒரே ஊரைச் சேர்ந்­த­வர்கள் என பொலிசார் கூறினர். இவர்கள் அனை­வரும் 25 வய­துக்­குட்­பட்ட இளை­ஞர்கள் எனக் கூறும் பொலிஸார் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பி­லான தொழில்­களில் இவர்கள் ஈடு­பட்­டி­ருந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டனர்.

இந்­நி­லையில் சிலை உடைப்பின் பின்­னணி மற்றும் நோக்கம் உள்­ளிட்­ட­வற்றை வெளி­ப்ப­டுத்த தொடர் விசா­ர­ணை­களை மாவ­னெல்லை பொலி­ஸாரும் கேகாலை குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரும் இணைந்து முன்­னெ­டுத்­துள்­ளனர்.

ஏற்­க­னவே கடந்த வருடம் டிசம்பர் மாத நடுப்­ப­கு­தியில்  மாவ­னெல்லை பொலிஸ் பிரிவில்  பாதை­யோர புத்தர் சிலைகள் இரண்டு தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யி­ருந்­தன. இது தொடர்பில் மாவ­னெல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், 2018 டிசம்பர் 26 ஆம் திகதி  அதி­காலை 3.00 மனி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­தலால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதனை அண்­டிய பகு­தி­யி­லி­ருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேத­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  இந்­நி­லையில் அதே திக­தியில் அதி­காலை 4.00 மணி­ய­ளவில் மாவ­னெல்லை -திது­ரு­வத்த சந்­தி­யி­லுள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அந்த சிலையை தாக்க மோட்டார் சைக்­கிளில் வந்­த­தாகக் கூற­ப்படும் இரு­வரில் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் பிடித்து மாவ­னெல்லை பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். அதன் பின்­ன­ரேயே இந்த சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் சம்­பந்­தப்­பட்ட ஏனை­யோரை பொலிசார் கைது செய்­தனர். இத­னை­விட அதே திக­தியில் யட்­டி­நு­வர ஸ்ரீ தொடங்­வல நாக விகாரை வளா­கத்­தி­லுள்ள புத்தர் சிலை­யொன்றும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அச்­சம்­பவம் தொடர்பில் ஸ்தலத்­துக்கு சென்­றுள்ள கண்டி மற்றும் பேரா­தனை பொலிஸார், தாக்­கப்­பட்ட புத்தர் சிலையை தமது பொறுப்பில் எடுத்­துள்­ளனர். அத்­துடன் விகா­ரையின் சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு கமெரா பதி­வு­க­ளையும் பெற்று விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இத­னை­விட இதனை அண்­மித்த தினத்தில் குரு­நாகல் – பொத்­து­ஹர பகு­தியில் உரு­வச்­சி­லைகள் சில சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் கைதான சந்­தேக நபர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் மற்றும் சில சான்­று­க­ளுக்­க­மைய வெலம்­பொட, மாவ­னெல்லை மற்றும் பொத்து­ஹர சம்­ப­வங்­க­ளுடன் ஒரே குழுவே தொடர்­பு­பட்­டுள்­ள­தாக பொலிசார் சந்­தே­கிக்­கின்­றனர். அதன்­ப­டியே  மாவ­னெல்லை விவ­கா­ரத்தில் கைதான 7 பேரையும் பொத்து­ஹர சம்­ப­வத்­துக்கு பொல்­க­ஹ­வல நீதி­மன்­றிலும், வெலம்­பொட சம்­ப­வத்­துக்கு கம்­பளை நீதி­மன்­றிலும் ஆஜர்­செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

4 கருத்துரைகள்:

This is too much. They are handling the low in Racist way. Until now no proper investigation happened for Breaking and damaging More than 100 MASJID. Digana Racist Killed our one of Respectful Sadakatullah Mawlavi.
WHERE ARE THE ACTIONS ,POLICE & LAW??? Shame and unlawful country LAW of SriLanka.

This is too much. They are handling the low in Racist way. Until now no proper investigation happened for Breaking and damaging More than 100 MASJID. Digana Racist Killed our one of Respectful Sadakatullah Mawlavi.
WHERE ARE THE ACTIONS ,POLICE & LAW??? Shame and unlawful country LAW of SriLanka.

Fully agreed.... All racist who attaked religious places and public properties should be arrested regardless of race..

Digana cases also should be considered under the same law with equal concern....

Not only budda statues but also masjids temples and churches to be protected by law.

Post a Comment