Header Ads



48 வருடமாக முஸ்லீம் பகுதியில் தொழில்செய்யும், அழகையாவின் அழகான நேர்மை

Irfhan Mohamed Yusuf Lebbe

#என்ன #ஆச்சரியம்!

இன்று 01.01.2019 காலை கிராம உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் வந்து அழகையாவைப் பற்றிய ஒரு சம்பவம் என தொடங்கினார்.

நீங்கள் அண்மையில் அவரைப்பற்றி பற்றி முக நூலில் பதிவிட்டிருந்தீர்கள். அதனால் உங்களிடம் சொல்கிறேன் என தொடர்ந்தார்

கடந்த வெள்ளிக்கிழமை சில சேட் டுகளை ஐயன் பண்ணுவதற்காக அழகையாவிடம் கொடுத்து விட்டு வந்திருக்கின்றார்.

வீட்டுக்கு வந்த போது நினைவுக்கு வந்திருக்கின்றது ஒரு சேட் பையினுள் ரூபாய் 60,000/= வைத்தது. உடனே பதற்றத்துடன் அழகையாவிடம் சென்றிருக்கின்றார்.

என்ன ஆச்சரியம்,  அறுபது ஆயிரம் ரூபாய் பணத்தை  இருவர் முன்னிலையில் எண்ணி பத்திரமாக வைத்திருப்பதை கண்டு வியப்படைத்திருக்கின்றார்.

குறித்த நபர், இவரின் உண்மைத் தன்மைக்கும், நேர்மைக்கும் இதுவே சாட்சி.

இவர் அணியும் வெள்ளை ஆடை, போல் துமைய்யானது இவரின் உள்ளமும் #ஐயா  #அழகையா  என்றும் வாழ்க #நலமுடன்.. ...

2

#அழகையா ஓர் அழகு......
நீண்ட நாட்களுக்கு பின்னர் tailer made ரவுசரை அயன் பண்ணுவதற்காக அழகையா அவர்களிடம் சென்றேன்
அயன் பண்ணும் வரை சில நிமிட உரையாடலிருந்து...
அழகையா அவர்கள் 1970 ஆம் ஆண்டிலிருந்து அக்கரைப்பற்று முஸ்லீம் பகுதியில் சலவைத் தொழிலில் ஈடுபடுவதாக சொல்கிறார் நாற்பத்து எட்டு வருட தொழில் அனுபவம்
தற்போது அவருக்கு வயது 71 யை நெருங்கிறது
#ஒன்றும் #வாங்காமல் ஒலுவிலில் திருமணம் முடித்து அக்கரைப்பற்றில் தான் #சொந்தமாக #வீடு கட்டி வாழ்கிறார் என பெரிய மனதுடன் செல்கிறார்
இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்
பிள்ளைகளை தனது சைக்கிளில் ஏற்றி இறக்கி கல்வி கற்பித்து ஆளாக்கியதாக செல்கிறார்
இரண்டாவது பெண் பிள்ளை 
ஒரு கலை பட்டதாரி
மூன்றது பிள்ளை ஒரு வழக்கறிஞ்சர்
முதலாவது பிள்ளையும் தொழிலுக்கு முயற்சித்தும் இன்னும் கை கூடவில்லை என்று கவலையுடன் கூறினார்
இவருடைய மருமகன் றஸ்பாஸ் பொத்துவில் கிளையின் முகாமையாளராக தொழில் புரிகிறார்
இந்த தொழில் மூலமே பெண் பிள்ளைகளுக்கு மூன்று வீடுகள் கட்டியுள்ளார்
இனி களைப்படைந்து விட்டதாகவும் ஓய்வு பெற வேண்டும் என்கிறார்
பழகுவதற்கு #இனிமையானவர்
எப்போதும் நெற்றியில் பொட்டு 
வெள்ளை நிற ஆடை 
அழகான சிரிப்பு என்பன இவரின் 
தனித்துவ அடையாளம்
சுக தேகத்துடன் இன்னும் பல ஆண்டுகள் எமது பகுதியில் தொழில் புரிய பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்......

4 comments:

  1. I KNOW HIM, HE’S PURE GENTLEMAN

    ReplyDelete
  2. 40 year Living in 99.9% Muslims environment but did not learn Islam from These Named Muslims. Very same.. None of them except Islam...

    ReplyDelete

Powered by Blogger.