Header Ads



கடலை நிரப்பும் பணி முடிந்தது - 3 முறை ஒலி எழுப்பி, மரியாதை செலுத்துவிட்டு புறப்பட்ட சீனக் கப்பல் (படங்கள்)


கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பதற்காக கடலை நிரப்பும் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு துறைமுக நகர பகுதியில் இன்று -16- விசேட வைபவமொன்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சேங் ஷூ ஹெங் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

269 ஹெக்டேயர் நிலத்தை உருவாக்க மணல் நிரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இறுதிக் கப்பலான ஷிங் ஹாய் லோங்க் பணிகளை முடித்துக்கொண்டு இன்று சீனா புறப்பட்டுச் சென்றுள்ளது.

குறித்த கப்பல் மூன்று முறை ஒலி எழுப்பி துறைமுக நகருக்கு மரியாதை செலுத்தி புறப்பட்டுச் சென்றுள்ளது.

தற்போது மணல் பூமியாக காணப்படும் துறைமுக நகரில் கட்டட நிர்மாணிப்பு, பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த கட்டமாக ஆரம்பிக்கப்பட உள்ளன.

இதன் போது இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய அபிவிருத்தித்திட்டமான துறைமுக நகரும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய இடம்வகிக்கும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.