Header Ads



இலங்கைக்கான ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிப்பு - ஹலீமின் முயற்சிக்கு வெற்றி (படங்கள்)


முஸ்லிம் சமய விவகார  அமைச்சர் எம். எச்.ஏ.ஹலீம்  சவுதி அரசாங்கத்தின் ஹஜ் விவகாரங்களுக்கு பொருப்பான அமைச்சர் உள்ளிட்ட குழுவுடன் இன்று  -14- நடாத்திய பேச்சு வார்த்தையின் பயனாக இம்முறை இலங்கைக்கு  வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை 3500  அதிகரிக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.

தற்போது சவுதி சென்றுள்ள அமைச்சர் ஹலீம், அங்கு  சவுதி அரசாங்கத்தின் ஹஜ் விவகாரங்களுக்கு பொருப்பான அமைச்சர் உள்ளிட்ட குழுவுக்கும் இடையில் ஜெத்தா நகரில் இடம் பெற்ற பேச்சுவார்னையின் போது, அமைச்சர் ஹலீம் அவர்கள் இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்குமாரு சவுதி அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். 

அதன் பயனாக சவுதி அரசு இம்முறை  இலங்கைக்கு  வழங்கும்  ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதேவேளை மேலும் 2000 கோட்டாக்களை இலங்கைக்கு வழங்க தாம் முயற்சிப்பதாக சவுதி அரசாங்கத்தின் ஹஜ் விவகாரங்களுக்கு பொருப்பான அமைச்சர்  உறுதி வழங்கியதாக அமைச்சர் ஹலீமின் பிரத்தியேகச் செயலாளர் பாஹிம் தெரிவித்தார்.






2 comments:

  1. வானொலி, தொடர்பாடல்கள் மூலமாக சுன்னாவான உம்ரா வணக்கத்தை மக்களுக்கு பார்ளாக்கி, ஏனைய எல்லா முக்கிய கடமைகளையும் பின்தள்ளிவிட்டு,மக்களை உம்ராவின் மீது மோகமும், மடத்தனமாக பக்தியைும் ஏற்படுத்த மக்களைச் சுரண்டும் ஒ்ரு வியாபாரம் நீண்டகாலமாக செயல்பட்டுவருகின்றது. அதற்கு மேல் கடமையானவர்கள் ஹஜ் செய்வதை விட்டு மக்களை அதாவது கடமையில்லாதவர்களையும் ஹஜ் செய்யத்தூண்டும் சக்திகள் மார்க்க்த்தின் பின்னணியில் இயங்குகின்றன, அதன் மற்றொரு பிரதிபலிப்பாகும் மார்க்கத்தின் பெயரால் மக்களை வழிகெடுக்கும் மற்றொரு முயற்சியாக இலங்கையிலிருந்து கூடுதலான மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லும் ஒரு சக்தியும் மார்க்கத்தின் பின்னணியில் நடந்து அதன் வெற்றிதான் மேல் உள்ள செய்தியின் சாராம்சம்.மார்க்கக் கட மைகளில், பொதுவிடயங்களில் எதற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என இந்த சமூகத்தில் புத்திஜீவிகள் மக்களைச் சரியாக வழிநடத்தாமல் அவர்களை வழிகெடுத்தும் அபாயம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, இதனை கண்டும் காணாமல் இருப்பவர் பலர். இந்த நிலைமையில் இந்த சமூகத்தை அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து சரியான திசையில் வழிநடத்துபவர்கள் யார்?

    ReplyDelete
  2. Well done Haleem. You have done a good job. However, there are number of Islamic countries in particular to North African are going to send small numbers in protest to killing of Jamal Khashoggi. To compensate, Saudi give more quota to other countries.
    I also can see the murderer on the left side of the main photo.

    ReplyDelete

Powered by Blogger.