January 03, 2019

3 முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவுடனே, வரவுசெலவுத் திட்டத்தில் வெற்றிபெற்றேன்

(அஷ்ரப் ஏ சமத்)

மேல் மாகாணத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்த்தினை  தோற்கடிப்பதற்கு சில உறுப்பிணா்கள் பாரிய பிரயத்தனத்தினை மேற்கொண்டனா். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் ரவுப் ஹக்கீம் மற்றும் தலைவா் றிசாத் பதியுத்தீன் ஆகியோறுடன் நான்  பேசிய பின்பு  அக் கட்சியின்  உறுப்பிணா்களான அர்சாத் நிசாம்தீன், ஷாபி ரஹீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பிணா் முஹம்மத் பாயிஸ் 3வரும் எனக்கு ஆதரவாக வாக்களித்தாா்கள் அதனால் தான் நான்  மேல்மாகாண வரவு செலவுத் திட்டத்தினை வாக்கெடுப்பில் வெற்றிகண்டேன்.  அந்த வெற்றியின் பயனே இப்பாடசாலைக்கு இந்த நிதி என்னால் ஒதுக்க முடிந்தது.  என மேல் மாகாணசபையின்  முதலமைச்சா் இசுருப் தேவப்பிரிய தெரிவித்தாா்.

மேற்கண்டவாறு முதலமைச்சா் இசுரு தேவப்பிரிய  இன்று (3) கொழும்பு -2 ல் உள்ள அல் -இக்பால் மகளிா் மகா வித்தியாலயத்தில் 3 கோடியே 28 இலட்சம் ருபா செலவில் 4 மாடிகள் கொண்ட வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தா். இவ் நிதி மேல்மாகாண சபை உறுப்பிணா் அரசத் நிசாமுத்தீன் அவா்களின் வேண்டுகோளின் பேரில் மேல் மாகாண சபை  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந் வைபவம் அல் இப்பால் கல்லுாாியின்  அதிபா் திருமதி  றிஹானா மரசூக் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வின்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மாண், மேல் மாகாண சபை உறுப்பினா்களான அர்சத் நிசாமுத்தீன் முஹம்மத் பாயிஸ், கொழும்பு பிரதிமேயா் முஹம்மத் இக்பால் மற்றும் மேல்மாகாண சபை கல்விப் பணிப்பாளா் சிறி லால் நோனிஸ் ஆகியோறும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பிணா்களும் கலந்து சிறப்பித்தனா்.

தொடா்நது உரையாற்றிய முதலமைச்சா் -

 நேற்று மேல் மாகணத்தில் உள்ள  ஆசிரியா் வெற்றிடங்களுக்காக 2014ல் நடைபெற்ற பட்டதாரி போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 510 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. மேலும் அடுத்த 3 மாதங்களுக்குள் மேலும்  போடடிப் பரீட்சை மூலம் 250 ஆசிரியா்கள் நியமிக்கப்படுவாா்கள.  அதில் பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான கேட்டுக் கொண்டதினங்க கொழும்பில் உள்ள 19 பாடசாலைகளில் விஞ்ஞானம், கணித ஆசிரியா்கள் பற்றாக்குறை உ்ள்ளதாக  தெரிவித்தா். அந்த வெற்றிடங்கள் நிறப்பபடும். கொழும்பு மாநகர எல்லைக்குள் கூடுதலாக முஸ்லிம் தமிழா்கள் பெரும்பாண்மையினராக வாழ்கின்றனா்.இந்தப் பிரதேசத்தில் பிறந்து இப் பாடசாலைகள்  கற்ற மாணவ மாணவிகள் சித்தியடைந்து  பல்கலைக்கழம் சென்றாலே தத்தமது பாடசாலைகளுக்கு ஆசிரியா் நியமனம் வழங்கப்படும். இல்லாத இடத்து வேறு மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகள் நியமனம் பெற்று 3 அல்லது 4 வருடங்கள் சேவையாற்றிவிட்டு அவா்களது சொந்த இடங்களுக்கு மாறுதலாகிவிடுகின்றனா். ஆகவே பெற்றோா்கள் தமது பிள்ளைகளை பட்டதாரிகளாக்க வேண்டும்  முன்னரை விட  தற்பொழுது மேல்மாகணத்தில் சிறுபான்மையினங்கள் பெண்பிள்ளைகள் சிறப்பாக கல்வி கற்கின்றனா். அன்மைய புலமைப் பரிசில் உயா்தர பெறுபேறுகளில் 4 -8 இடங்களில் முஸ்லிம் தமிழ் மாணவா்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனா்.  ஆகவே தான் கொழும்பில் உள்ள 19 பாடசாலைகளுக்கும் உதவுவதற்காக ஹமிடியா அல்லது சம் ஜெம்ஸ் வா்த்தகா்கள் உதவிவருகின்ற்னா்.  சிலேவ் ஜலண்ட சிறந்த தொடா்மாடி வீடமைப்புத் திட்டங்கள் நல்ல சூற்று சூழல் ஏற்பட்டு வருகின்றது. சிறந்த பாடசாலைகள் மேலும் பாடசாலைகள் இந்தப் பிரதேசத்தில் உருவாகவேண்டும். பாடசாலைகளை மூடாது அதனை பாதுகாப்பதில் பெற்றாா் மற்றும் பழைய மாணவகள் சங்கங்கள் பாடுபடுதல் வேண்டும் எனவும் கூறினாா். 

இங்கு உரையாற்றிய அமைச்சா் ரவுப் ஹக்கீம்- 
மேல் மாகணத்தில் கடந்த 3 வருடங்களாக முதலமைச்சராக இருக்கும் இசுரு தேவப்பிரிய தொடந்தும் மேல் மாகாண சிறந்த சேவையை செய்து வருகின்றாா். அவர் எதிா்காலத்திலும் முதமைச்சராக வருவதற்கு எமது கட்சி ஆதரவளிக்கும் அவா் சிறுபாண்மை இனங்களுக்களுக்கு இந்த மாகாணத்தில் சிறந்த சேவை செய்வதனை அவதாணிக்க முடிந்தாகவும் அமைச்சா் அங்கு தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

Post a Comment