Header Ads



2 ஆம் இடத்தை, சுவீகரித்தார் முஜீபுர் ரஹ்மான் - முதலாமிடம் அனுரகுமார

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு சிறப்பாக செயற்பட்டவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் முதலாமிடத்தை ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளதுடன், இரண்டாம் இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பெற்றுக்கொண்டுள்ளார்.  

இந்தத் தகவலை  manthri.lk இணைய தளம் வெளியிட்டுள்ளது. 

கடந்த வருடம் பாராளுமன்ற அமர்வுகளையும் செயற்பாடுகளையும்  மையமாக வைத்து இந்த தரவு திரட்டப்பட்டுள்ளது.  பாராளுமன்ற அங்கத்தவர்கள் பத்து பேர் இதன் மூலம் தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர்.  

அதன்படி முதலமிடத்தில் அனுரகுமார திசாநாயக்கவும், இரண்டாம் இடத்தில் முஜீபுர் ரஹ்மானும், மூன்றாம் இடத்தில் ஸ்ரீநேசனமும், நான்காவது இடத்தில் சுனில் ஹந்துநெத்தியும், ஐந்தாவது இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவும், ஆறவாது இடத்தில், விமல் வீரசன்சவும், ஏழாவது இடத்தில் கயந்த கருணாதிலக்கவும், எட்டாவது இடத்தில் ரோஹித அபேகுணவர்தனவும், ஒன்பதாவது இடத்தில் பிமல் ரத்னாயக்கவும், பத்தாவது இடத்தில் காஞ்சன விஜேசேரகவும் பிடித்துள்ளனர்.

4 comments:

  1. எங்கட முஸ்லிம் காங்கிரஸ் எம்பீமாருக்கு முஸ்லிம்கள்ட விசயத்தில் எவ்வளவு கரிசனைன்னு பாருங்க.

    ReplyDelete
  2. கொழும்பு முஸ்லிம்களின் கல்வி நிலைமை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது .முஜிபுர்ரஹ்மான் ,அசாத் சாலி போன்றவர்கள் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும்

    ReplyDelete
  3. Also Please do not forget to give information about the LAST 10 of Parliament.
    "LAST 10 of Parliament"

    ReplyDelete
  4. மண்ணினதும் விண்ணினதும் வழிகாட்டிகளாக இவ்விருவரும் இணைந்து செயல்பட்டால் காணலாம், அமைதியும் அபிவிருத்தியும் இலங்கையில்.

    ReplyDelete

Powered by Blogger.