Header Ads



21 Mp க்களே தற்போது, சுதந்திரக் கட்சியில் உள்ளனர் - தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டமைக்கான தெளிவான சாட்சியங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இவர்களின் நோக்கம் என்ன என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியில் 11 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு அந்த பக்கம் சாய்ந்து கொண்டனர். 21 பேர் எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர். சிலர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டனர்.

பௌசி, பியசேன கமகே, மனுச நாணயக்கார, விஜித் விஜயமுனி சொய்சா போன்றோர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பேர் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருந்துக் கொண்டு எந்த அரசியல் சக்திகளுடன் இணைய வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டவர்கள் தற்போது இணையவில்லை என்கின்றனர். வீரர்கள் போல் சென்று அந்த கட்சியில் இணைந்துக்கொண்டதை மக்கள் கண்டனர். டுவிட்டர் பக்கத்தில் போட்டனர்.

அங்கத்துவ அட்டைகளை காட்டினர். தற்போது இணையவில்லை என்று கூறுகின்றனர் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.