Header Ads



20 சுதந்திரக் கட்சி, Mp க்கள் ஐதேக. யுடன் இணைகின்றனர் - லக்ஷ்மன் கிரியெல்ல

மார்ச் மாதம் வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 20 க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டு  வரவுசெலவு திட்டத்தை வெற்றிபெறச் செய்வதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்துவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் வரவு செலவு திட்டத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.