Header Ads



12 பெண்கள் ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றனர், இஸ்லாமிய வாழ்வு மிகவும் பிடித்துவிட்டது என்கின்றனர்


சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா, பிலிப்பைன், பிரிட்டன் என்று பல நாட்டைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். 

இவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் நாத்திக சிந்தனையிலேயே இருந்துள்ளனர். இந்த பெண்களும் பெற்றோர்களை பின்பற்றி நாத்திக சிந்தனையிலேயே இருந்துள்ளனர். பணி நிமித்தமாக சவுதி அரேபியா வந்த இவர்களுக்கு இஸ்லாமிய வாழ்வு முறை மிகவும் பிடித்து விட்டது. அகாடமியின் முயற்சியால் இந்த பெண்களுக்கு சில மாதங்களாக குர்ஆனின் போதனைகளும் நபிகளாரின் வாழ்வு முறையும் போதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த நிகழ்வில் 12 பேரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

படத்தில் இருப்பது எட்டு சகோதரிகள். மற்ற நான்கு சகோதரிகள் புகைப்படத்தில் இல்லை. இவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் நிலைத்திருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்

3 comments:

  1. May Allah bless you all for getting back to your GOD's religion. Now submit your worship purely to him and insha Allah you will be rewarded Jannah.

    May Allah Keep all of us strong in his religion and make us die in it only.

    ReplyDelete
  2. Masha Allah great news! May almighty Allah bolster theri feet in Islam.

    ReplyDelete
  3. Masha Allah great news! May almighty Allah bolster their feet in Islam.

    ReplyDelete

Powered by Blogger.