Header Ads



UNP யுடன் சேர்ந்தது என் மன சம்மதமின்றியே, தேர்தல் மேடைகளில் நான்பட்ட வேதனைகளை என்மனம் மட்டுமே அறியும்

மைத்ரி - மஹிந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இன்றைய கூட்டத்தில் நடந்தது என்ன ?

“ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது பேர் இருந்தால் தேசிய ஆட்சியமைக்கலாமென ரணில் ஓடித்திரிகிறார். அப்படியே எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 9 எம் பிக்கள் எங்கள் பக்கம் வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றியும் நீங்கள் சிந்தியுங்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் முன்னர் சேர்ந்தது என் முழு மனதின் சம்மதம் இன்றியே. அந்த தேர்தல் மேடைகளில் நின்ற போது நான் பட்ட வேதனைகளை என் உள்மனம் மட்டுமே அறியும். நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுங்கள். அப்போதே நாம் எமது பயணத்தினை தொடரலாம்.”

இவ்வாறு இன்று -18- காலை நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி...

பிரதமர் சத்தியப்பிரமாணம் நடந்து முடிந்த பின்னர் ஜனாதிபதி ஆற்றிய உரை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் உரை “ அத்தி விசிஷ்ட்டை” ( மிகச் சிறப்பு )என்று கூறி பாராட்டிய டக்ளஸ் தேவானந்தா ,சுதந்திர முன்னணி இனவாத கருத்துக்களை தெரிவிக்கக் கூடாதென ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக தகவல்..

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்தவை முன்மொழிய இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது ..

-SIVARAJA-

5 comments:

  1. Ithu Valivedlu Jocka vida perusaa irukkeee???

    ReplyDelete
  2. நன்றிகெட்ட ஒரு பிறவி. ஜனாதிபதியாக இருக்கத்தான் தகுதியில்லை என்று நினைத்தோம். ஆனால் மனித பிறவியாகவே இருக்கத்தகுதி அற்ற ஒரு பிராணி.

    ReplyDelete
  3. If this guy destabilizes the government again to please MR team, an impeachment should be brought against him. Nobody should trust this low principled person.

    ReplyDelete
  4. ஏதோ வித்தியாசமான சாமானொன்றை அடித்துவிட்டார் போல்

    ReplyDelete
  5. Mr presient you speech is verry good

    ReplyDelete

Powered by Blogger.