Header Ads



ஜனாதிபதியின் கரங்களில், அமைச்சர்களின் பெயர் பட்டியல்

நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவைக்கான 30 பேர் அடங்கிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் நிதி அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள். எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சு குறித்து இதுவரையிலும் தீர்மானிக்கப்படவில்லை.

எஞ்சிய அமைச்சர்கள் அடுத்த சில நாட்களில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. 30 அமைச்சர்கள் மிக அதிகம்.
    10 பேர் தாராளமாக போதுமானது. மகாண அமைச்சர்கள் வேறு 36 உள்ளார்கள்.
    மைத்திரி இந்த விடயத்தை ரணிலுடன் கதைத்து, 10 ஆக குறைக்க வேண்டும்

    ReplyDelete
  2. அறிவுக்கடல் அந்தோனிர யோசனையைக் கேளுங்கப்பா எல்லாரும்............

    ReplyDelete
  3. அமைச்சர்களே இல்லாமல், மன்னராட்சி வந்தால் எப்படி.?

    ReplyDelete
  4. சூப்பர் சஜ்ஜஸ்ஸன் அஜன் அண்ணே.....

    ReplyDelete

Powered by Blogger.