Header Ads



பாவச் செயலை உச்ச நீதிமன்றம், செய்யும் என நான் நினைக்கவில்லை - கம்மன்பில

உயர் நீதிமன்றம் வெளியிடவுள்ள தீர்ப்புக்கு அமைய விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நீதிமன்றங்களுக்கான வருடாந்த விடுமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான மனு மீதான விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தீர்ப்பினை விரைவாக வழங்கவில்லை என்றால் நாடு பாரிய ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும். அவ்வாறான பாவ செயலை உச்ச நீதிமன்றம் நாட்டிற்கு செய்யும் என நான் நினைக்கவில்லை.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் நீதிமன்ற சட்டதரணிகள் வெளியிட்ட கருத்திற்கு அமைய, பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புக்கு உட்பட்டே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார் என உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தவர்களில் உதய கம்பன்பிலவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.