Header Ads



ரணில் - சம்பந்தன் மந்திர ஆலோசனை, பேசப்பட்டது என்ன...?

ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். 

இந்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு அனைவரினதும் ஆதரவு எமக்கு தேவை. எனவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் அரசியலில் இணைந்து செயற்படுவதற்கு ஏனைய கட்சிகள், தரப்புகளிலிருந்து வரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரவரணைக்குத்துக் கொள்ளுங்கள் என சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, அரசுக்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்து 20 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. புதிய அரசு, இனப்பிரச்சினைத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான பாராளுமன்ற பலத்தை பெறுவதற்காகத் தனது தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 130 ஆக அதிகரிக்க முயல வேண்டுமெனவும் சம்பந்தன் இதன்போது ரணிலிடம் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட சில முக்கிய அமைச்சுக்கள் தொடர்பில் நியமிக்கப்படக் கூடிய அமைச்சர்கள் விடயத்தில் தங்கள் எதிர்பார்ப்பும் நிமைப்பாட்டிலிலும் இருப்பதாக இந்த சந்திப்பின்போது சம்பந்தன் பிரதமர் ரணிலிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பிலிருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என இந்தச் சந்திப்பின்போது சம்பந்தனுக்குத் ரணில் விக்ரமசிங்க தெரியப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.