Header Ads



"எமது அரசியல் நடவடிக்கையில், நாம் தொடர்ந்தும் நிலைத்திருப்போம்"

உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள விளக்கம் தொடர்பில் எமக்குள் வித்தியாசமான கருத்துக்கள் இருந்தாலும், தீர்ப்பை மதிக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

எமது அரசியல் நடவடிக்கையில் நாம் தொடர்ந்தும் நிலைத்திருப்போம். பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை வேண்டும் மக்களுடன் தொடர்ந்தும் செயற்படப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் நீதிமன்றத்துக்கு வந்தது தேர்தல் ஒன்றை நடாத்துவதா? இல்லையா? என்பதை பார்த்துக் கொள்வதற்கு. நீதிமன்றம் இப்பொழுது தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புடன் நாம் உடன்படாது போனாலும், இதற்கு அப்பால் எமக்கு செல்வதற்கு நீதிமன்றம் ஒன்று இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.  

4 comments:

  1. நாங்கள் நாட்டுமக்களின் சொத்துக்களை களவெடுத்து திண்ணுவதில் நிலைத்திருப்போம் இந்த தொழில் எங்களின் பாட்டன் பூட்டனுடைய பரம்பரைத் தொழில், *யார் எங்களை பற்றி என்ன இழிவாக சொன்னாலும் எங்களால் ஒருபோதும் அதை விடமுடியாது*!

    ReplyDelete
  2. மண் ஒட்டவில்லை... ஆனாலும் மீசையைத் துடையுங்கள்...!

    ReplyDelete
  3. இப்போதாவது இந்த இரண்டு கள்வர்களை சிறையில் நிரந்தரமான அடைக்காவிட்டால் மீண்டும் ரணிலுக்கு எஞ்சுவது அழிவுமட்டும்தான் என்பதை ஐதேகயும் ரணிலும் இப்போதாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. son...dadi then api monawatha karanne?
    dad...mey oya lesthiwela inda ,
    son... mokkadatha
    dad...api kohama hari kullappu karala rajeyya naasthikarala imu ...
    son...oww.mamath ekathamay kiyanne..
    thawa ekak dadi..mey ranil appiwe hiratta daaydha..
    dad...owa beha.mama eka kataakarannanko ranilta..api kohama hari eliya indapulawang..

    ReplyDelete

Powered by Blogger.