Header Ads



நாடு அராஜக நிலையிலோ, ஸ்திரமற்ற நிலைமையிலோ இல்லை - ஜனாதிபதி

நாடு அராஜக நிலையிலோ, ஸ்திரமற்ற நிலைமையிலோ இல்லை எனவும் அவ்வாறு யார் கூறுகின்றார்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கேள்வி - நடந்த அரசியல் மாற்றங்களுடன் நாட்டில் அராஜக மற்றும் ஸதிரமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டில் இருந்து நீங்கள் விடுபட முடியுமா?

பதில் - யார் அப்படி கூறுகின்றனர். மக்கள் அன்றாடம் தமது வேலைகளில் ஈடுபடுகின்றனர். வர்த்தகங்கள் நடக்கின்றன. பிரச்சினைகளும், நெருக்கடிகளும் இல்லை. அனைத்து சேவைகளும் வழமை போல் நடக்கின்றன. அராஜகம் மற்றும் ஸ்திரமின்மை என்பன அரசியல் வார்த்தைகள்.

கேள்வி - எனினும் ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த தீர்மானம் மற்றும் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களுக்கு அடிப்படையாக பொறுப்புக்கூற வேண்டியவர் நீங்கள். இப்படியான தீர்மானத்தை எடுக்க காரணமாக அமைந்த காரணம் என்ன?

பதில் - ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவையான வகையில் நாட்டை அழிக்க இடமளிக்க வேண்டும் என்றா கூறுகின்றீர்கள். ஊழல், மோசடிகள், கொள்ளை, நாட்டை காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும் போது வேடிக்கை பார்க்க முடியுமா?.

அதனை தடுத்தது நான் ஏற்படுத்திய ஸ்திரமின்மையை, நெருக்கடியை ரணிலே உருவாக்கியுள்ளார். இது ஒரு நாள், இரண்டு நாள் நெருக்கடியல்ல.

கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த நெருக்கடி என்பது இரகசியமான விடயமல்ல. அமைச்சரவையில் மோதல்கள், அதற்கு வெளியில் நடந்தவை என்பன கொலை சதித்திட்டம், கொள்ளை, ஊழல், காட்டிக்கொடுப்பு என்பவற்றுடன் ஏற்பட்ட பிரதிபலனே என ஜனாதிபதி கூறியுள்ளார்.

2 comments:

  1. ஹிருனிகா மனைவி,மகளிடம் கூறிய ஆலோசனை இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.நிச்சியம் வௌிநாட்டுக்காவது அனுப்பி நல்ல அனுபவம்வாய்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மனநோயாள வைத்திய நிபுணர்களிடம் காட்டி,வைத்தியசாலையில் நிறுத்தி சிலகாலம் வைத்தியம் செய்ய வேண்டும் என்பது இப்போது உறுதிப்படுத்தப்படுகிறது.இந்த நாட்டு மக்களுக்கு கடவுள் அருள்பாலிப்பானாக.

    ReplyDelete
  2. His daughter has mentioned in her book about her father that my3 is an adamant person who will never agree that he is wrong.

    ReplyDelete

Powered by Blogger.