Header Ads



தன்னை விமர்சித்தவர்களுக்கு மைதானத்தில் தக்க பதிலடி கொடுத்த மத்தியுஸ் (வீடியோ)

நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் சதமடித்த அஞ்சலோ மத்தியுஸ் தனது உடற்தகுதியை விமர்சித்தவர்களை கேலி செய்யும் நோக்கில் புஸ் அப்பில் ஈடுபட்டார்

வெலிங்டனில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்டின்  முதல் இனிங்ஸில்  83 ஓட்டங்களை பெற்ற மத்தியுஸ் இரண்டாவது இனிங்சில் சதமடித்து 117 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இலங்கை அணி 13 ஓட்டங்களிற்கு  மூன்று விக்கெட்களை இழந்து தத்தளித்துகொண்டிருந்தவேளை குசால் மென்டிசுடன் இணைந்த மத்தியுஸ் நான்காவது விக்கெட்டிற்காக 246 ஓட்டங்களை பெற்றுள்ளார்

இன்றைய நாளாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இருவரும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்

இதேவேளை இன்று தனது சதத்தை பூர்த்தி செய்த பின்னர் மத்தியுஸ் தனது உடல் தகுதியை காரணம் காட்டி தன்னை அணிக்கு தெரிவு செய்யாமல்விட்ட முன்னால் தெரிவுக்குழுவினரிற்கு ஒரு செய்தியை தெரிவிக்கும் விதத்தில் புஸ்அப்பில் ஈடுபட்டார்

சதமடித்த பின்னர் தனது பட்டை உயர்த்திக்காட்டிய மத்தியுஸ் உடனடியாக பத்து புஸ்அப்பில் ஈடுபட்டார்

அவரது புஸ் அப்பினை சகவீரரான குசல் மென்டிஸ் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

மத்தியுஸ் அணியின் ஓய்வறையை நோக்கி தனது புஜத்தையும் காண்பித்தார்

No comments

Powered by Blogger.