Header Ads



கிழக்கு மாகாணம், சிங்கப்பூர் நாட்டுடன் இணைகிறது


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவுக்கும் சிங்கப்பூர் சீன வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) செவ்வாய்க் கிழமை சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக சம்மேளன தலைமையக அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது. 

சுமார் 40000 அங்கத்தவர்களை கொண்ட வர்த்தகர்கள் சிங்கப்பூர் சீனா வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றனர் .

கிழக்கு மாகாணத்தை சிங்கப்பூர் நாட்டுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் முதலீடுகளை கொண்டு வருவதற்குமான ஒரு சிறந்த பேச்சுவார்த்தை இடம் பெற்றது. விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, உள்நாட்டு உற்பத்தி உட்பட பல வர்த்தக உடன்படிக்கைகளுக்கான பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி மிக்க  முதலீடுகளை கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 2019 ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நடை முறைப்படுத்தவுள்ளதாக இதன் போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக குறித்த துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு மாகாணத்தை அபிவிருத்தியடையச் செய்வதில் பலதரப்பட்ட பங்குகளை விசேடமான துறைகள் ஊடாக மேற்கொள்ள ஒரு கட்ட நடவடிக்கையாகவும் இக் கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகவும் கருதப்படுகிறது.

கிழக்கு ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான  இவ் சிங்கப்பூர் நாட்டு விஜயத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி, முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன, ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன், இணைப்புச் செயலாளர் நிமால் சோமரத்ன உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டார்கள்.

1 comment:

  1. முதலாவது highway சம்பந்தமாக கொழும்பில் இருந்து கிழக்கு மாகானம் வரை பாதையை போட்டு விட்டு அடுத்த கட்ட அபிவிருத்தி சம்பந்தமாக ஆராய முடியும்
    என்ன அபிருத்தி செய்வதாக இருந்தாலும் பாதைகல் சரியாக இருக்க வேண்டும் குறுகிய நேரத்திற்குள் போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் பாதைகளை சீர் செய்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.