Header Ads



"ஜனாதிபதிக்கு பீதி" - சர்ச்சைக்குரிய அரசிதழை, ரத்துச்செய்ய தீவிர ஆலோசனை

நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் ஆம் நாள் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய அரசிதழ் அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக அளிக்கப்படும் தீர்ப்பு தமக்குப் பாதகமாக அமையக் கூடும் என்ற அச்சத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த முடிவு குறித்து ஆராய்வதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

இந்த நிலையில் அதற்கு முன்னதாக- பெரும்பாலும் வரும் 5ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் ரத்துச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடும் ஒருவர், இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மீளப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கலைப்பு தவறானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எனினும் அரசிதழ் அறிவிப்பை மீளப் பெறும் திட்டம் தொடர்பாக தான் எதையும் அறியவில்லை என்று, சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் தர்மசிறி எக்கநாயக்க கூறினார்.

அதேவேளை, உச்சநீதிமன்றம் தனக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கும் சாத்தியம் இல்லாததால், இந்தச் சிக்கலில் இருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு சிறிலங்கா அதிபர் எதிர்பார்ப்பதாக, சிறிசேனவின் கட்சியைச் சேர்ந்த இன்னொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

2 comments:

  1. This president has a prominent negative feature , that is he takes big decisions immedietlly without discussing and thinking in deep. But to escape from negative outcomes from those decisions he thinks and take advise a lot... it shows he is not capable figure for leadership ....its dangerous to country....

    ReplyDelete
  2. IT IS THE MINORITY TAMIL AND MUSLIM VOTES THAT BROUGHT MY3 TO POWER AS PRESIDENT UNDER THE "HANSAY" BACKED BY THE UNP AND SO-CALLED CURRUPT CIVIL SOCIETY (AMIL THERA TAKING BRIBES FROM LITRO GAS AND CURRUPT MUSLIM ORGANIZATIONS TAKING MONEY FROM FOREIGN WESTERN POWERS,INGO'S). AN ESTIMATED 800,000 MUSLIMS VOTES WERE DUPED TO VOTE THE HANSAYA IN 2015. NOW IT IS THE MINORITIES, ESPECIALLY THE MUSLIMS WHO HAVE THE POWER TO MAKE A CHANGE AT THE NEXT ELECTIONS TO BRING A MUSLIM FRIENDLY
    POLITICAL GOVERNMENT, Insha Allah. LET THE MUSLIMS FORM THEIR OWN POLITICAL POWER, Insha Allah AND SUPPORT MAHINDA PELA AGAIN FOR A CHANGE, BUT ONLY IF RESONABLE MUSLIM DEMANDS ARE MET AND MUSLIM POLITICAL DIGNITY IS GIVEN, Insha Allah. MAHINDA GOVERNMENT WAS BETTER THAN THE RANIL/MY3 GOVERNMENT OR ANY UNP GOVERNMENTS BEFORE.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.