Header Ads



'வர்த்தமானி' யினால், மோதல் உருவாகுமா..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

ரணில் விக்ரமசிங்கவை சீண்டும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்படத் தொடங்கியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வெளியான அமைச்சர்களுக்கான பொறுப்புகள், அவர்களுக்கு கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பிலான வர்த்தமானி வெளியாகி இருந்து.

நிறுவன ஒதுக்கீடுகள் தொடர்பில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேடமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் மற்றும் இலங்கை விமான சேவையும் எந்தவொரு அமைச்சின் கீழும் வரவில்லை என்பது விசேட அம்சமாகும்.

எப்படியிருப்பினும் இந்த அமைச்சுக்களுக்கான வர்த்தமானி ஐக்கிய தேசிய கட்சியின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தனிப்பட்ட விஜயமாக தாய்லாந்து சென்றுள்ள நிலையில் அவர் இன்றைய தினமே இலங்கைக்கு வரவுள்ளார். அதற்கமைய அமைச்சுகளுக்கான பணிகளின் வர்த்தமானி அதன் பின்னர் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அனைத்து திட்டங்களையும் மாற்றி நேற்றைய தினமே வர்த்தமானியை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த வர்த்தமானி முழுமையாக ஜனாதிபதியின் கண்கானிப்பின் கீழ் மாத்திரம் வெளியாகியுள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்பின்றி வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

எப்படியிருப்பினும் இந்த வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான மோதல் நிலைமையின் தீவிர தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

எனினும் பொறுமையாக முகம் கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.