Header Ads



பர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்

முஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போதும், பர்தாவுடன் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளை பர்தாவை கழற்றுமாறு பரீட்சை மேற்பார்வையாளர்கள் கேட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன.

அத்தகையதொரு சம்பவம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2018 - கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது நடைபெற்றதாக தேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளாவது, அநுராதபுர மாவட்டத்தில் உள்ள கனேவல் பொல முஸ்லிம் வித்தியாலயம், பமுனுகம முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவிகள் தாம் அணிந்திருந்த பர்தாவை கழற்றி விட்டு பரீட்சைக்கு தோற்றுமாறு மேற்பார்வையாளர்கள் பணித்துள்ளனர். இச்சம்வபம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் பத்திரத்திற்கு தோற்றுவதற்காக மாணவிகளில் பலர் பல மைல்களுக்கு அப்பாலுள்ள தமது வீடுகளுக்குச் சென்று முந்தானைகளை எடுத்து வந்து பரீட்சைக்கு தோற்றியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வடமத்திய மாகாண அமைப்பாளர் எச்.எம்.சமீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் எச்.எம்.சமீம் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. தான் படிக்கும் பாடசாலையின் உடை விதிகளே இவ்வளவு காலமும் தெரியாத மாணவிகளா?
    இது கூட தெரியாதவர்கள் பரீட்சை வேறு எழுதுகிறார்களாம்!
    காமேடி news போல

    ReplyDelete
  2. வர்த்தகத்தில் அடித்தவர்கள் இன்று கல்வியிலும் கைவைக்க முயல்கின்றனர்.

    ReplyDelete
  3. Where are the so called human rights groups... for them this not a human right issue but ....


    ReplyDelete
  4. அஜன் அந்தோணி,டேய் மங்கூஸ் மண்டையா எல்லா பாடசாலைகளிலும் பரீட்சை நிலையமில்லை
    இது கூட தெரியாம மத்தவங்கள கலாய்க்க வெளிக்கிட்டுட்ட ...பன்னாட ...

    ReplyDelete

Powered by Blogger.