Header Ads



நான் முஸ்லிமல்லாத அமைச்சரென்பதால், ஒரு முடிவை எடுக்க முடியாதுள்ளது - தலதா

(அஷ்ரப் ஏ சமத் ) 

முன்னால் கொழும்பு மேயரும் தற்பொழுது மலேசியாவின் துாதுவருமான ஏ.ஜே.எம் முஸம்மில் பௌன்டேசன் சாா்பில் 3500 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவம் பெரோசா முசம்மில் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் தலாத்தா அத்துக்கோரல கலந்து கொண்டாா். இந் நிகழ்வு இன்று (28) கொழும்பு பொது நுாலகத்தில் நடைபெற்றது. 

இங்கு உரையாற்றிய  நீதியமைச்சர்  - முஸ்லிம் விவாகம் மற்றும் விவகரத்துச் திருத்தச் சட்டம் பற்றிய அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டு 9 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த அறிக்கை தன்னிடம்  சமா்ப்பிக்கப்பட்டு 4 மாதங்கள் கடந்து விட்டன. 

 கடந்த நவம்பா் மாதம் இவ் அறிக்கை பற்றி நிதியமைச்சினால் நியமிக்கப்பட்ட  குழு  கூடி ஒரு முடிபை எடுப்பதாக இருந்தேன் கடந்த 51 நாற்கள் அரசாங்கத்தில் நிலவிய பிரச்சினைகளால் காலதாமதம் ஏற்பட்டது . அடுத்த 2 மாதங்களுக்குள் இவ் அறிக்கையின் குழ தலைவரான  நீதிபதி சலிம் மர்சுசூப், மற்றும்  நீதிபதி சலாம்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினா்  முஸ்லிம் அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், றிசாத்பதியுத்தீன் கபீா் ஹாசீம் ஆகியோறுடன் கலந்து ஆலோசித்து அவா்கள் எடுக்கும் முடிபினை  உடன் அமுல்படுத்துவேன். தான் முஸ்லிம் அல்லாத ஒரு அமைச்சா் அதனால் அச்சட்டம் பற்றி தனால் ஒரு முடிபு எடுக்க முடியாது. இவ் விடயம் சாா்ந்த அமைச்சா்கள் பாராளுமன்ற உறுப்பிணா்கள்  தங்களது  ஒன்று கூடி அவா்கள் ஒரு தீா்வுக்கு வந்தபின் அதனை என்னால் உடன் அமல்படுத்த முடியும். தற்பொழுது நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாகர மற்றும்  விவாகரத்தச் சட்டம்  1956ல் தயாரிக்கப்பட்டவையாகும் அதில் சில திருத்தங்கள் கட்டாயம் அமுல்படுத்த வேண்டும்.    

. தற்பொழுது நீதியரசா் சலிம் மா்சூப் மற்றும் நீதிபதி சலாம் ஆகியோா்கள் நாட்டில் இல்லை  அவா்கள் வெளிநாடுகளில் உள்ளாா்கள் அவா்கள் வரவழைத்துத்தான்  இவை பற்றி உரிய நடவடிக்கை எடுப்பேன். ஒரு அறிக்கைதான் ஆனால் இரண்டு குழுக்களாக பிறிந்துள்ளா்கள் எனவும் நிதி அமைச்சா் தலாத்தா அத்துக்கோரலா தன்னிடம் பதிலளித்தாா் )  

1 comment:

  1. அம்மா தலதா அத்துக் கோரள அவரகளின் முன்மாதிரியைப் பாருங்கள். இருக்கும் அமைச்சர்கள் 75 பேரும் இப்படியான மனோபாவத்துடன் 1947ல் இருந்து இருந்திருந்தால் நாடு தற்போது இருந்து கொண்டிருக்கும் கேவலமான நிலைக்கா சென்றிருக்கும்.

    மக்கள் நல்ல விளக்கமுள்ளவரகளாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் அரசியலாளர்கள்தான் தங்களையும் மக்களையும் போட்டுக் குளப்புகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.