Header Ads



பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்

பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட  நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடிக்கு பதிலாக வடக்கின் புலி கொடியை ஏற்றுங்கள் என வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் எலிய அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாடு அழிவுப் பாதையில் செல்வதை தடுத்து நிறுத்தும் வகையில் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்திற்கு எதிராக அடிப்படைவாதிகள் நீதிமன்றம் சென்றனர். மக்கள் ஆணைக்கு எதிராகவே நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு எதிராக வேண்டுமானாலும் அமையலாம். 

ஆனால் பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைக்கப்பெற்றால் பாற்சோறு உண்ண தயாராக இருந்தவர்கள் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும். மகிழ்சியில் பட்டாசு கொளுத்த நினைத்தவர்கள் தமது பிள்ளைகளின் மார்பில் பாயும் துப்பாக்கி ரவைகளாகவே அதனை கருத வேண்டும். 

தேசிய கொடியை ஏற்றி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளவர்கள் வடக்கின் புலி கொடியினை ஏற்றுங்கள் என தெரிவித்தார்.

6 comments:

  1. அரசியல் வாதிகள் தான் பாதிக்கப்படுவர்.
    மக்களுக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே கதிதான்...

    ReplyDelete
  2. So what about the Sihalaya flag....Dr. Ceetha???
    Oh its with your permission...no problem!!!
    and what about Rajapakshas are sleeping in TNA MPs homes...?
    Dont be chilly anymore....we are not foolish, just tell this to My3

    ReplyDelete
  3. ஏதாவது விளங்குதா?

    ReplyDelete
  4. You go to hell with your boss take all the Drugs with you...

    ReplyDelete
  5. r u dr..fool ...r u joking tooo much stop ur nonces talking.

    ReplyDelete

Powered by Blogger.