Header Ads



ஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி

எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது.

இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதோடு ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த பலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் சிலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக அரியவருகின்றது.

மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதற்கு ஜனாதிபதி நீங்கள் எடுக்கும் தனிப்பட்ட தீர்மானங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் துமிந்த திஸநாயக்க தலைமையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, தயாசிறி ஜயசேகர, பைஸர் முஸ்தப்பா உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்ட நபர்களே ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணைய உள்ளனர்.

இவ்வாறு இணைய உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றிரவு அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தயாசிறி ஜயசேகர, திங்கட்கிழமை புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் தனித் தனியாக இணைவதை தவிர்த்து குழுவாக இணைவதே சிறப்பானது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் மணித்தியாலங்களில் இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் இடம்பெறலாம் என்பது தற்போது காணப்படுகின்றது.

1 comment:

  1. I do not understand why these guys are coming again. Another disaster......Get loss UNP if they take SLFPers.

    ReplyDelete

Powered by Blogger.