Header Ads



மாவனல்லை சம்பவம், களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள்

-Zafnas Zarook-

(இது நேற்றைய -26- நிலவரங்களின் தொகுப்பே இது)

1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் அல்ல.

2.கைது செய்யப்பட்டவர் பலத்த காயங்களுக்கு உட்பட்டு இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

3.பொலிசார் குறித்த புத்தர் சிலை உடைப்பிற்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாகவும் எனினும் அவதானமாக இருக்குமாறும் பள்ளிவாயல்களின் ஊடாக மக்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.

4.குறித்த செயற்பாடு ஆனது ஒரு குறித்த மத இயக்கத்தினரால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை இதுவரை தெரியவரவில்லை.

5.பொலிஸார் மற்றும் விசேடபாதுகாப்பு படையினர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளனர்.

6.குறித்த கைதுசெய்யப்பட்டவரின் சார்வாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் ஆஜராக உள்ளார்.

7.இதுவரை 4 பேர் காணமல் போகி உள்ளதாக ஒரு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து அவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

8.ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து மாவனல்லையில் பிக்குகள் மற்றும் உலமாக்களின் பங்குபற்றுதலின் ஊடான சந்திப்பு ஒன்று நடைப்பெற்றுள்ளது.

9.சமூக அமைப்புக்கள் சம்பவம் குறித்து அதீத கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் இது குறித்த பல்வேறு வதந்திகள் பரவுவதால் ,அது குறித்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.

1.தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில்

2.கைது செய்யப்பட்டவர் மிக சிறந்தவர் என்றும் அவர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவரது குடும்பம் மற்றும் சமூகத்தார் பொலிசாரிடம் கூறி உள்ளனர்.

3.கைதானவரின் தந்தை சற்று முன் தன் மகனை வைத்தியசாலையில் பார்வை இட்டதோடு; அவருக்கான சட்ட ஆலோசனை மற்றும் ஏனைய விடயங்களை சட்டத்தரனி சிறாஸ் ஹசன் மேற்கொண்டு வருகிறார்.

4.கைதானவரை அதிகமாக அடித்து துன்புறுத்திய வேளையில் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது.

5.ஒரு பெண் மற்றும் கைகுழந்தை உள்ளடங்களாக 4 பேரை இதுவரை காணவில்லை என்றும் அவர்கள் தலைமறைவா அல்லது கடத்தப்பட்டார்களா என்பது பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது.

6.இபறாஹிம் மெளலவி  இடம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.