Header Ads



இராஜாங்க அமைச்சராக, ஹரீஸ் கடமையேற்பு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (27) வியாழக்கிழமை கொழும்பு யூனியன் பிலேஸில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவதுவல, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும்  உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி அரசியல் பிரமுகர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராகவிருந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அண்மையில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார். அதற்கமைவாக அவ்வமைச்சுப் பொறுப்புக்களை இன்று காலை பொறுப்பேற்றார். 

இதன்போது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சின் உயர்அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸூக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. I am trying to understand what is the so called "religious ritual" going on by touching his and or applying something on his hand. Do we really need to replicate the "blessing ceremony" normally happening when ministers of other religious start their works. Islam is a simple religion and in my understandings, starting the work with good intention and pronouncing "Bismillah-ir-Rahman-ir-Rahim" will be more than enough. Theses are good opportunities for our people to demonstrate how simple and logical are Islam & Muslims to other communities. We don't have any "living holiness" in Islam to perform blessing.In my opinion, if the person, who assuming duty can make Dua, even in a few words to ask Allah's guidance and help to fulfill the duties of the position appropriately, that is more than enough than this kind of "show-off" blessing. I hope our leaders will conduct their public acts in a way that can earn respect for our religion and community.

    ReplyDelete

Powered by Blogger.