Header Ads



மாவனெல்லை சம்பவம் அடுத்த, தேர்தலை இலக்கு வைத்ததாகும் - திலும் அமுனுகம

கேகாலை, மாவனெல்லை பிரதேசம் உட்பட சில இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் அரசியல் சக்தி இருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளமையானது அடுத்த தேர்தலை இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ள கருத்து என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் (மகிந்த அணி) நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ நாமல் குமார வெளியிட்டுள்ள தகவலின்படி கண்டி, திகன சம்பவம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் தூண்டி விட்ட சம்பவம் என்பது தெளிவாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின,ர் இனங்களுக்கு இடையில் கடுமையான பிளவுகள் இருக்க வேண்டும் என்று நம்பும் அணியினர்.

இவர்களின் அரசியல் இலாபத்திற்காக, தேர்தலில் வெல்ல முடியாது என்ற காரணத்தினால், இனவாதத்தை பரப்பி வெற்றி பெற முயற்சித்து வருகின்றனர்.

இதனால், எதிர்கால அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் லக்ஷ்மன் கிரியெல்ல இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளார்” என திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மாவனெல்லை சம்பவங்களுடன் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே ஆகியோருக்கு தொடர்பிருப்பதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இந்த திட்டத்திற்கான பணத்தை செலவிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.