Header Ads



ரணிலின் அரசாங்கம் எதிர்ப்புக்களை சமாளிப்பதற்கு, புத்தர் சிலை உடைப்பை பயன்படுத்துகின்றது

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மூன்று நான்கு பக்கங்களிலிருந்தும் வரும் எதிர்ப்புக்களை சமாளிப்பதற்கு புத்தர் சிலை உடைப்பை பயன்படுத்த முயற்சிக்கின்றது என வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டினார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகளவில் ஆரம்பித்துள்ள பௌத்த விகாரைகளைத் தரிசிக்கும் சந்தர்ப்பத்தில் தான் இந்த புத்தர் சிலை உடைப்பு இடம்பெறுகின்றது.

பல்வேறு பக்கங்களிலிருந்தும் வரும் சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாதவாறு அரசாங்கம் தவிக்கின்றது. ஒரு புறம் ஜனாதிபதியின் எதிர்ப்பு, மறுபுறம் பாராளுமன்றத்தில் பலமான எதிர்க் கட்சி, அடுத்தது மக்களின் எதிர்ப்பு. இவ்வாறு செயற்பட முடியாமல் தவிக்கும் இந்த அரசாங்கம் வழி தேடுவதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.